Pan card mandatory to purchase or sell property : ரூ.10 லட்சத்துக்கு மேல் விலையுள்ள சொத்து வாங்கவோ விற்கவோ செய்தால் உங்கள் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியன் என மோடி அரசு அறிவித்துள்ளது. ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் உள்ள அசையா சொத்தை வாங்கவோ விற்கவோ செய்வதானால் அதற்கு உங்கள் நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண் அவசியம் என மத்திய அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒருவர் ரூபாய் 10 லட்சத்துக்கு அதிகமான விலையுள்ள அசையா சொத்தை விற்கவோ அல்லது வாங்கவோ செய்தால் அதற்கு அவருடைய பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம் என வருமான வரி விதிகள் 1962 ல் உள்ள இணை பிரிவு 139A ல் உள்ள துணை பிரிவு (5)ல் கூறப்பட்டுள்ளது என நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்து மூலம் லோக்சபாவில் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Jio Vs Airtel Vs Vodafone : சிறந்த மாதாந்திர ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது?
இந்த நடைமுறை பினாமி பெயரில் சொத்துகள் வாங்குவதை கட்டுப்படுத்துவதோடு ஒரு வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்குவதை தடுக்கவும், வெளிப்படைதன்மையை கொண்டு வரவும், அனைத்து சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளையும் ஆதார் மூலம் இணைக்க உள்ளதாக அரசிடம் எதாவது திட்டம் உள்ளதா. அப்படி திட்டம் உள்ளதேன்றால் எப்போதிருந்து அந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் அதன் மூலம் மக்கள் அடையப் போகும் பயன் என்ன என கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் மத்திய அமைச்சர் மேற்குறிப்பிட்ட விஷயத்தையும் கூறினார்.
உடனடி பான் அட்டை
கடந்த 2020 நிதி நிலை அறிக்கையில் அரசு ஆதார் அட்டை மூலம் உடனடி பான் அட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நீளமான விண்ணப்ப படிவத்தை நிரப்பாமல், இணையதளம் வாயிலாக ஆதாரை அடிப்படையாக கொண்டு பான் எண் உடனடியாக வழங்கப்பட உள்ளது. கடந்த பட்ஜெட்டில் பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இரண்டையும் ஒன்றோடு ஒன்று மாற்றிக் கொள்ளலாம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு தேவையான விதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழில் இந்த கட்டுரையை எழுதியவர் எஸ். மகேஷ்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"