Advertisment

வட்டியே இல்லாமல் ரூ. 60 ஆயிரம் வரை கடன் வழங்கும் பேடிஎம்... அவசர தேவைக்கு உதவும்

இந்த சலுகை தற்போது தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரம், மற்றும் தெலுங்கானாவில் உள்ள 200 மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Paytm to offer up to Rs 60,000 loan at 0 percent interest with Postpaid Mini service 320942

Paytm to offer up to Rs 60000 loan at 0% interest : Buy Now, Pay Later service என்ற திட்டத்தின் கீழ் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது பேடிஎம் நிறுவனம். போஸ்ட்பெய்ட் மினி என்று வழங்கப்படும் இந்த சேவை, வாடிக்கையாளர்களுக்கு சிறிய அளவில் கடன்களை வழங்க முடிவு செய்துள்ளது. ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து இந்த கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பேடிஎம் நிறுவனம்.

Advertisment

வங்கி எஃப்.டி. திட்டங்களை எல்லாம் மறந்துருங்க! 7.1% வட்டி தரும் தபால் சேமிப்பு திட்டம்..

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்ப செலவுகளை மேலாண்மை செய்துகொள்ள முடியும். போன் ரீச்சார்ஜ் முதல், டிடிஎச் ரீசார்ஜ், சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றையும் செலுத்துக் கொள்ள இயலும்,

ரூ. 60 ஆயிரம் உடனடிக் கடன் வழங்குவது மட்டுமின்று ரூ. 250 முதல் ரூ. 1000 வரையிலான கடன்களையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பேடிஎம் மாலில் தங்களுக்கு தேவையான பொருட்களையும் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ள இந்த கடன் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

தொலைந்து போன பான் கார்டை மீண்டும் பெறுவது எளிமையானது; ஸ்டெப்-பை- ஸ்டெப் வழிமுறைகள் இங்கே!

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் மூலம் நுகர்வுகள் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். மேலும் புதிய சேவை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பில்களை செலுத்த பெரிய வகையில் உதவிகரமானதாக இருக்கும் என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் பாவேஷ் குப்தா அறிவித்துள்ளார். இந்த சலுகை தற்போது தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரம், மற்றும் தெலுங்கானாவில் உள்ள 200 மாவட்டங்களில் மட்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Paytm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment