வங்கி எஃப்.டி. திட்டங்களை எல்லாம் மறந்துருங்க! 7.1% வட்டி தரும் தபால் சேமிப்பு திட்டம்..

இந்த ஒரு திட்டம் மட்டும் 15 ஆண்டு கால திட்டம் என்பதால் முதலீடு செய்வதற்கு முன்பு சற்று யோசித்து முடிவெடுங்கள்

Post Office Schemes

Post Office Schemes : நீண்ட கால முதலீட்டிற்கு சிறந்த தேர்வாக வெகுநாட்கள் இருந்தது நிலையான வைப்பு நிதி திட்டங்கள். ஆனால் சமீப காலமாக குறைந்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் எதில் முதலீடு செய்வது என்று குழப்பத்துடன் உள்ளனர். நீங்களும் அது போன்ற ஒரு குழப்பத்தில் இருந்தால் உங்களுக்கான விடை இதோ. வங்கிகளைக் காட்டிலும் தபால் நிலையங்கள் தரும் வட்டியும், ரிட்டர்ன்ஸும் உங்களின் முதலீட்டை பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

Time Deposit Account

தபால் நிலையங்களில் உள்ள முதலீட்டு திட்டங்களில் பலரின் விருப்ப தேர்வாக இருக்கும் முதலீட்டு திட்டம் Time Deposit Account ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு 6.7% வட்டியை இந்த திட்டம் உங்களுக்கு வழங்குகிறது. இது பிரபலமான வங்கிகளில் வைக்கப்படும் நிலையான வைப்பு நிதிகளுக்கான வட்டியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

RD in post office

தேசிய சேமிப்பு ரெக்குரிங் டெபாசிட் திட்டம் (National Savings Recurring Deposit Account) என்று வழங்கப்படும் இந்த ஆர்.டி. திட்டம் உங்களுக்கு 5.8% வரை வட்டி வழங்குகிறது.

Post Office National Saving Certificate (NSC)

இந்த தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் உங்களுக்கு 6.8% வட்டியை வழங்குகிறது. தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டம் National Savings Certificate எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ். சிறு வருமான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழே உள்ள கட்டுரையில் படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

சந்தை அபாயங்கள் இல்லாத தேசிய சேமிப்பு திட்டம்; முழுமையான விவரம் இங்கே!

பி.பி.எஃப். கணக்கு

மற்ற வங்கி சேவைகளில் இருப்பதை போன்றே தபால் நிலையங்களிலும் பி.பி.எஃப். நீண்ட கால முதலீட்டு திட்டம் உள்ளது. 15 ஆண்டுகள் மெச்சூரிட்டி கொண்ட இந்த முதலீட்டு திட்டம் உங்களுக்கு 7.1% வட்டியை வழங்குகிறது. நீண்ட கால முதலீடு என்பதால் நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Post office schemes that give more returns than bank fixed deposits

Next Story
ஊரடங்குல சொந்தமா கார் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சா? குறைந்த வட்டியில் லோன் தரும் வங்கி எது?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X