SBI, HDFC Penalty Charges for Not Maintaining Minimum Balance in Saving Account: மினிமம் பேனன்ஸை முறையாக கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் பிரபல வங்கிகள் எவ்வளவு அபராதம் வசூல் செய்கின்றன தெரியுமா? குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றில் குறைந்தபட்ச பண இருப்பு இல்லாவிட்டால் வசூலிக்கப்படும் அபராதம் குறித்து இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
அஞ்சல் சேமிப்புக்கு பின்பு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் பிரச்சனை மினிமம் பேலன்ஸ் தான். வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற வங்கியின் விதிமுறையை பலரும் மறந்து விடுகிறார்கள்.
இதன் பயனாக வங்கிகள் அறிவிக்கும் அபராதத் தொகையை வேறு வழியின்றி கட்டுகின்றனர். ஆனால் பெரும்பாலான வங்கிகளில் அபாரத் தொகையாக எவ்வளவு ரூபார் வசூல் செய்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.
இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் பிரபலான 2 பேங்கில் மினிமம் பேலன்ஸ் அபாரத் தொகை எவ்வளவு? என்ற விளக்கம் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.
read more.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு செம சான்ஸ்..உங்களுக்காகவே 3 புதிய திட்டங்கள்!
எஸ்பிஐ வங்கி:
எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும்.
இதை பின்பற்றாதவர்கள், மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.
நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் 7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.
read more.. ஆன்லைனில் அடிக்கடி பணம் அனுப்புபவரா நீங்கள்? வங்கிகள் உங்களிடம் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு?
ஹெச்டிஎப்சி:
மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.
இதை பின்பற்றாதவர்கள், மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் 150 ரூபாய் + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் 300 ரூபாய் + ஜிஎஸ்டி, கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 450 ரூபாய் + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.