post office interest rates : நாடு முழுவதும் தபால் சேவைகளை வழங்கி வரும் இந்திய தபால் துறை மக்களுக்கு பயனுள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் வருமான வரி விலக்கு அளிக்கக்கூடிய திட்டங்களும் உள்ளன. டைம் டெபாசிட் (Time deposit), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior citizen saving scheme), பப்ளிக் ப்ரொவிடெண்ட் ஃப்ண்ட் (Public provident fund), நேஷனல் சேமிப்பு (National savings certificate) ஆகிய திட்டங்கள் தபால் அலுவகங்கள் மற்றும் வங்கிகளில் உள்ளன. தபால் அலுவலகத்தில் சேமிப்பு வைத்திருக்கும் நபர் சேமிப்பு திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.
டைம் டெபாசிட் திட்டத்தின் பயன்கள்:
டைம் டெபாசிட் திட்டத்தில் 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு வட்டி விகிதம் 7 சதவீதம். அதாவது 3 வருடத்திற்கு 7 சதவீதம் வட்டியுடன் முதலீடு கிடைக்கும். இதேபோல் இந்த திட்டத்தின்கீழ் 5 வருடத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு 7.8 சதவீதம் வட்டி கிடைக்கும். இதற்கான வட்டி காலாண்டிற்கு கணக்கிடப்பட்டு ஆண்டின் முடிவில் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் 80-வது பிரிவின்கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
பணம் எடுக்க, போட, கடன் வாங்க எதுக்குமே பேங்க போக வேண்டாம்! பிரபல வங்கியின் அல்டிமேட் அறிமுகம்!
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்:
இந்த திட்டத்தில் இணைய 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வருடத்திற்கு 8.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. முதலில் மார்ச் 31/செப்டம்பர் 30/டிசம்பர் 30 இவற்றில் எதாவதொரு தேதியில் வழங்கப்படும் வட்டி, அதன் பிறகு மார்ச் 31/ ஜுன் 30/ செப்டம்பர் 30/ டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவதொரு தேதியில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு.
15 வருட சேமிப்புத் திட்டம்:
இந்த கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ. 500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ரூ. 100 செலுத்தி இந்த கணக்கை தொடங்கலாம். இதற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும். இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து அதன் மூலம் பயனடையலாம்.