தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டங்கள் - கணக்கு வழக்கு தெரிஞ்சுகோங்க

Post Office Savings: சேமிப்பு கணக்கில் செக் புக் வழங்க வைப்புதாரர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது (10 leaves வரை ஒரு வருடத்துக்கு). அதன் பிறகுள்ள...

Post Office Savings Account: மாதாந்திர வருவாய் திட்டம் (Monthly Income Scheme), தபால் நிலைய நேர வைப்பு (Post office Time Deposits), தேசிய சேமிப்பு திட்டம் (National Saving Scheme) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் வைப்புதாரர்களிடம் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும். எடுத்துககாட்டாக கணக்குகளை மாற்றுவது (transferring accounts), புதிய செக் புத்தகம் வாங்க (getting a new checkbook) மற்றும் கணக்கு அறிக்கை (account statement) வழங்க என்பது போன்ற சேவைகளுக்கு கட்டணம் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

தபால் நிலையங்கள் பல்வேறு வகையான வைப்பு திட்டங்களை வழங்குகிறது அவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன, ஏனென்றால் இந்த திட்டங்களுக்கு அரசின் ஆதரவு மற்றும் உத்தரவாதம் உள்ளதால். மேலும் பெரும்பாலான இந்த திட்டங்கள் வருமான வரிச் சட்ட பிரிவு 80Cன் கீழ் வரி சலுகைகளையும் வழங்குகின்றன. அதனால்தான் பல முதலீட்டாளர்கள் இந்த திட்டங்களை வைத்திருக்க விரும்புகின்றனர்.

ரூ.498க்கு இலவச ரீசார்ஜ்? – ஜியோ பற்றிய வாட்ஸ் அப் தகவல் உண்மையா?

தகவல் தொடர்பு அமைச்சகம் தபால் நிலைய திட்டங்களை நடத்துகிறது. தபால் நிலையங்களில் உள்ள பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பின்வருமாறு தபால் நிலைய நேர வைப்பு கணக்கு (Post Office Time Deposit Account TD), தபால் நிலைய மாதாந்திர வருவாய் திட்ட கணக்கு (Post Office Monthly Income Scheme Account MIS), 5 வருட தபால் நிலைய தொடர்ச்சியான வைப்பு கணக்கு (5-Year Post Office Recurring Deposit Account RD), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme SCSS), தபால் நிலைய சேமிப்பு கணக்கு (Post Office Savings Account), தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificates NSC), Sukanya Samriddhi Accounts, Kisan Vikas Patra (KVP), மற்றும் 15 வருட பொது வருங்கால வைப்பு நிதி (15-year Public Provident Fund Account PPF).

இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய நீங்கள் திட்டமிட்டால் அல்லது உங்களுக்கு தபால் நிலைய சிறு சேமிப்பு திட்டம் ஏதாவதில் கணக்கு இருந்தால் கணக்கு தொடர்பாக சேவை கட்டணங்கள் பற்றி இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாஸ் புத்தகத்தின் நகல் (duplicate passbook) வழங்க வைப்புதொகையாளர்களிடம் ரூபாய் 50/- வசூலிக்கப்படும்.

கணக்கு அறிக்கை வழங்க ரூபாய் 20/- வசூலிக்கப்படும் (for each case)

வைப்பு ரசீது (deposit receipt) வழங்க ரூபாய் 20/- வசூலிக்கப்படும்

தொலைந்த அல்லது சிதைந்து போன பாஸ் புக்குக்கு (passbook) பதிலாக புதிய பாஸ் புக் வழங்க ஒரு பதிவுக்கு ரூபாய் 10/- என வசூலிக்கப்படும்

nomination மாற்ற அல்லது நீக்க ரூபாய் 50/- வசூலிக்கப்படும்

இக்கட்டான சூழலிலும் எஸ்பிஐ-யின் புதிய அறிவிப்பு – மனம் குளிர்ந்த வாடிக்கையாளர்கள்

ஒரு கணக்கை மாற்ற (transferring an account) மற்றும் pledging of an account வைப்புதாரர்களிடம் ரூபாய் 100/- வசூலிக்கப்படும்.

சேமிப்பு கணக்கில் செக் புக் வழங்க வைப்புதாரர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது (10 leaves வரை ஒரு வருடத்துக்கு). அதன் பிறகுள்ள ஒவ்வொரு cheque leaf க்கும் ரூபாய்2/- வீதம் வசூலிக்கப்படும்.

dishonor of cheque க்கு ரூபாய் 100/- வரை வைப்புதாரரிடம் வசூலிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close