PPF long term saving plan can be extended to 5 more years : பி.பி.எஃப். என்படும் (பொது சேம நல நிதியம்) பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் அனைவருக்கும் தெரியும். நீண்ட கால சேமிப்பிற்காக பயன்படும் மிக முக்கியமான சேமிப்புத் திட்டமாகும். ஒருவர் இந்த சேமிப்புத் திட்டத்தில் 15 ஆண்டுகள் வரை பணத்தினை சேமிக்க முடியும். ஆனால் கணக்கர்கள் விரும்பினால் மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்த கணக்கினை நீடித்துக் கொள்ள இயலும்.
Advertisment
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?
எஸ்.பி.ஐ வழங்கும் பி.பி.எஃப் கணக்கு
இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
உங்களின் சேமிப்பு காலம் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே சேமிப்பு காலத்தினை நீடித்துக் கொள்ள விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
அதனால் என்ன நடக்கும்?
இந்த திட்டத்தை நீங்கள் நீட்டிக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்த பணத்தின் மீதான வருமான வரிக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. லிக்விடிட்டியின் போது முதலீட்டாளர் தன்னுடைய சேமிப்பில் 60% வரை ஒன்று அல்லது அல்லது தவணைகளில் பணத்தை எடுத்துக் கொள்ள இயலும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கும் பி.பி.எஃப் திட்டம்
மார்ச் 31ம் தேதி 2014ம் ஆண்டில் உங்கள் பி.பி.எஃப். கணக்கில் 15 லட்சம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இந்த கணக்கை மேலும் துவங்க விரும்புகின்றீர்கள் என்றால், இதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு பணம் தவணை முறையில் செலுத்தீனீர்களோ அதனை நீங்கள் தொடர வேண்டும்.
மார்ச் 31, 2019 அன்று உங்களால் உங்கள் கணக்கில் இருந்து 60% அதாவது 9 லட்சம் ரூபாயை ஒரே நேரத்தில் வித் ட்ரா செய்து கொள்ள இயலும். முதலீட்டாளர் இந்த திட்டத்தை விரும்பும் பட்சத்தில் ஃபார்ச் எச் (Form H)-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.