வருங்கால வைப்பு நிதி: உங்கள் பிஎஃப் கணக்கில் தவறு இருக்கிறதா? அதை எவ்வாறு சரிசெய்வது?

நீங்கள் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் என்றால், உங்களது சம்பளத்தில் ஒரு பகுதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (employees provident fund) என்ற இபிஎப் க்கு செல்லும். இது உங்கள் சம்பளத்தில் மிகவும் எரிச்சலூட்டும் பகுதியாக கூட இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், நமது சம்பளத்தில் ஒரு பகுதி…

By: Updated: February 7, 2020, 03:09:12 PM

நீங்கள் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் என்றால், உங்களது சம்பளத்தில் ஒரு பகுதி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (employees provident fund) என்ற இபிஎப் க்கு செல்லும். இது உங்கள் சம்பளத்தில் மிகவும் எரிச்சலூட்டும் பகுதியாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், நமது சம்பளத்தில் ஒரு பகுதி மாதம்தோறும் சேமிப்பாக மாறி நம்மால் வேலை செய்ய முடியாமல் ஆகும் போதோ அல்லது நமது பணி ஓய்வுக்கு பிறகோ, அது நமக்கு ஒரு வருமானமாக இருக்கப் போகிறது என்பதை புரிந்துக் கொள்ள நம்மில் பலர் மறந்து விடுகிறோம்.

நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை…

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்க…: ஆன்லைனிலேயே மொபைல் எண், அட்ரசை அப்டேட் பண்ணலாம்..

சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் கிடைக்கும் இந்த திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம் (Employees Provident Fund Organiastion) நிர்வகிக்கப்படுகிறது.

மற்ற எல்லா திட்டங்களையும் போல உங்களது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட கணக்கிலும் சில தவறுகள் இருக்க வாய்ப்புள்ளது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களையும் தங்களது பிஎப் கணக்கில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்கிறது. உங்கள் பிஎப் கணக்கில் தவறுதலாக உள்ள உங்கள் பெயர், பிறந்த தேதி ஆகிய விவரங்களை திருத்தம் செய்ய உங்களுக்கு அனுமதியுண்டு. உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் பிஎப் கணக்கில் உள்ள விவரங்களும் வேறு வேறாக இருந்தால், ஆதார் கார்டில் உள்ள விவரங்களை போல பிஎப் கணக்கு விவரங்களையும் மாற்ற மட்டுமே அனுமதியுண்டு.

பிஎப் கணக்கு விவரங்களை எப்படி மாற்றம் செய்வது?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரப்பூர்வ இணைய முகவரிக்கு செல்லுங்கள்

உங்கள் பிஎப் கணக்கு (UAN) விவரங்கள் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி லாகின் செய்யுங்கள்

எஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்?

Manage என்பதை கிளிக் செய்து Modify Basic Details எனபதை தேர்வு செய்து தேவையான திருத்தங்களை செய்யவும்.

Update Details என்பதை கிளிக் செய்து, மேற்கொண்ட திருத்தங்களை ஒப்புதலுக்கு சமர்பிக்கவும்.

பிஎப் கணக்கின் பயன்கள்

உங்கள் பிஎப் கணக்கில் நீங்கள் பங்களிப்பு செய்வது வருமான வரி சட்டம் பிரிவு 80c ன் கீழ் வரிவிலக்கு பெற உதவும். இதுவே பிஎப் கணக்கின் முக்கியமான பயனாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Provident fund mistake in your pf account here is how to correct it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X