எஸ்பிஐ-யில் ஏன் நான் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்?

ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் ஆனால் எந்த வங்கியை தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பிக்கொண்டிருந்தால் உங்களுக்கான ஒரே தேர்வு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாகத்தான் இருக்க முடியும். எஸ்பிஐ வங்கிக்கு இந்தியா முழுவதும் அனைத்து நகரங்களிலும் வங்கி கிளைகளும் ஏடிஎம் மையங்களும் உள்ளதால் உங்களுக்கு தரமான வங்கி சேவை எளிதில் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கி பல இதர சேவைகளையும் மக்களின் வங்கி சேவை தேவைகளை நிறைவு செய்யும் […]

sbi account state bank of india

ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் ஆனால் எந்த வங்கியை தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் குழம்பிக்கொண்டிருந்தால் உங்களுக்கான ஒரே தேர்வு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாகத்தான் இருக்க முடியும். எஸ்பிஐ வங்கிக்கு இந்தியா முழுவதும் அனைத்து நகரங்களிலும் வங்கி கிளைகளும் ஏடிஎம் மையங்களும் உள்ளதால் உங்களுக்கு தரமான வங்கி சேவை எளிதில் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கி பல இதர சேவைகளையும் மக்களின் வங்கி சேவை தேவைகளை நிறைவு செய்யும் விதத்தில் வழங்கி வருகிறது.

இந்த https://sbi.co.in/web/personal-banking/accounts/current-accounts இணைப்பை சொடுக்குவதன் மூலம், வங்கி சேவை குறித்து மேலும் கூடுதலான தகவல்களை பெற முடியும்.

நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் – எஸ்பிஐ vs கனரா வங்கி! எது பெஸ்ட்?

ஆனால் இது மட்டுமே இந்த வங்கியை தேர்ந்தெடுப்பதர்க்கான ஒரே காரணமாக இருக்க முடியுமா. இது ஒரு முக்கியமான காரணமாக இருந்தாலும், இந்த ஒன்று மட்டுமே காரணமில்லை. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சேவைகளை வழங்குகிறது என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்,

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முதல் 50 காசோலைகளை இலவசமாக வழங்குகிறது.

இதன் கைபேசி வழி வங்கி பரிவர்த்தனை சேவைகள் மிகவும் நேர்த்தியாக உள்ளது.

இந்த வங்கி இணையவழி வங்கி சேவைகளையும் வழங்குகிறது.

ஏடிஎம் கார்டுகள் முதல் ஆண்டில் இலவசமாக வழங்கப்படுகிறது.

நாளொன்றுக்கு ரூபாய் 25,000/- வரை கணக்கில் வைப்பு வைப்பதர்க்கு கட்டணமில்லை.

வங்கியின் ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு கணக்குகளை பரிமாற்றம் செய்ய எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

கணக்கு தொடர்பான மாதாந்திர, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அறிக்கைகளை (statement of account) வழங்கப்படுகிறது.

மின்னஞ்சல் மூலம் கணக்கு விவரங்களை பெறும் வசதியுள்ளது.

தனிமனித விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது ( விருப்பத்துக்கு ஏற்ப).

வட்டி விகிதம் இல்லை.

அதிகபட்ச வைப்பு தொகைக்கு எந்த வரம்பும் இல்லை.

இந்தியாவில் முதன் முதலாக – எஸ்பிஐ அறிவித்திருக்கும் புதிய லோன் ஆஃபர்

யாரெல்லாம் எஸ்பிஐ யில் கணக்கு துவங்கலாம்.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC)க்கு தேவையான தகுதியான ஆவணங்கள் உள்ள அனைவரும் வங்கி கணக்கு துவங்க விண்ணப்பிக்கலாம். வாடிக்கையாளர்கள் தனியாகவோ அல்லது இருவர் இணைந்தோவங்கி கணக்கு துவங்கலாம்.

மிக முக்கியமான நிபந்தனைகள்

கணக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் மின்னஞ்சல் மூலமாகவே வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை அவர்களது வங்கி கணக்கு உள்ள கிளையிலோ அல்லது இணையவழி வங்கி சேவை மூலமாகவோ அப்டேட் செய்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் பிரிண்ட் செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை வாங்க விரும்பினால் அவர்களது வங்கி கணக்கு உள்ள கிளையை அணுக வேண்டும்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi account state bank of india

Next Story
நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் – எஸ்பிஐ vs கனரா வங்கி! எது பெஸ்ட்?SBI and Canara bank FD Interest rates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express