Punjab National Bank provides upto Rs.8 lakh loan through Mobile app: இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் இப்போது ரூ.8 லட்சம் வரை முழு பலனைப் பெறலாம். PNB இன்ஸ்டா லோன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இந்த திட்டத்தின் மூலம் 8 லட்சம் ரூபாய் வரை வங்கி கடனாக வழங்குகிறது. நீங்கள் தனிநபர் கடன் வாங்க விரும்பினால், அதற்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டால் போதும், இனி, நீங்கள் எளிதாக கடன் பெறுவீர்கள். மொபைல் மூலம் எளிதாக கடன் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த கடன் திட்ட அறிவிப்பை PNB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது. இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் PNB One பயன்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள்: மருத்துவ காப்பீடு; குறைந்த பிரீமியம் உடைய பாலிசி எது தெரியுமா?
PNB One ஆப் மூலம் இந்த வசதியைப் பெறலாம்
நீங்கள் PNB One Mobile App மூலம் PNB Insta கடன் வசதியை பெறலாம். மேலும், 18001808888 என்ற கட்டணமில்லா எண் மூலமாகவும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
யார் எல்லாம் இந்தப் பலனைப் பெற முடியும்?
பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்த கடனை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, tinyurl.com/t3u6dcnd என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
நீங்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், https://instaloans.pnbindia.in/personal-loan/verify-customer#! என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று நேரடியாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அதில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஆதார் விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் விண்ணப்பத்திற்கு தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும். உங்களின் விண்ணப்பம் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, கடன் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.