sbi : வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் குறைத்துள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை செய்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 6 குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைப்பது மற்றும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பது என்ற முடிவுக்கு ஆதரவாக அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ அறிவிப்பை அடுத்து, வங்கி நிறுவனங்கள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு.
இதனுடன் வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை குறையும்.இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ஒருவாரத்திற்குள் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.
எஸ்பிஐ,இந்தியன் வங்கி போன்ற எந்த பொதுத்துறை வங்கிகளில் வாகன கடன் வீட்டுக்கடன் வாங்கியிருந்தாலும் சரி, ஆக்சிஸ், எச்டிஎப்சி,ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகளில் ஏனைய கடனகள் வாங்கி இருந்தாலும் சரி வரும் நாட்களில் உங்களது வட்டி வகிதம் குறையும்.