ரெப்போ வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி ரெப்போ ரெட் விகிதத்தை 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகக் குறைத்து அறிவித்த நிலையில் அடுத்த இரு மாதங்களில் மீண்டும் 40 புள்ளிகளைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி.
திருப்பதி லட்டுகள் இனி சென்னையிலும் : தேவஸ்தானம் அறிவிப்பு
இந்த வட்டிக்குறைப்பின் மூலம் வங்கிகளில் வீட்டுக்கடன் பெற்றவர்கள், வாகனக்கடன் பெற்றவர்கள், தொழிலுக்காக கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணைக்கான வட்டி பெருமளவு குறையும். கடந்த இரு மாதங்களில் ஏறக்குறைய. 1.15 சதவீதம் வட்டியைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
Moratorium on term loans available till May 31, now extended by another three months till August 2020 @IndianExpress
— Sandeep Singh (@Tweetsandeep) May 22, 2020
இதுகுறித்து மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறுகையில், "பொருளாதார சூழ்நிலையை ரிசர்வ் வங்கி கவனித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4.4 % லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது. குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. உலக பொருளாதாரம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை சுருங்கக்கூடும். உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறை வளர்ச்சி, நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. மானாவாரி சாகுபடி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்புகளின் விலை அதிகரிக்கலாம். உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் பண வீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி மார்ச்சில் 17 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழ்நிலை இந்தாண்டு இல்லை.
உம்பன் புயல் சேதம்: மேற்கு வங்கத்தில் இன்று மோடி ஆய்வு
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பிரச்னையை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதி பிரச்னையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி அளிக்கப்படும். சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது
கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத அவகாசம் அளிக்கப்படுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு காரணமாகவும், கொரோனா இடையூறு காரணமாகவும் கடன் தவணைகளை செலுத்துவதற்கான அவகாசம் ஜூன் 1 முதல் ஆக.,31 வரை அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.