/tamil-ie/media/media_files/uploads/2019/12/credit-cards.jpg)
RBI New Debit, Credit Card Rules: New Contactless, Online Transactions Rules : உங்களிடம் இருக்கும் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை நீங்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தவில்லை எனில் நீங்கள் இனி அந்த கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்கே பயன்படுத்த இயலாது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் க்ரெடிட், டெபிட் கார்ட்கள், ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு ஒரு போதும் பயன்படுத்தப்படவில்லை என்றால் வருங்காலங்களில் பயன்படுத்த தடை விதித்து ஜனவரி 15ம் தேதி அறிவித்துள்ளது.
கிரெடிட் கார்ட்கள் மற்றும் டெபிட்கார்டுகள் மூலம் நடைபெறும் பணவர்த்தனையை பாதுகாப்பாக மேற்கொள்ள 15ம் தேதி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. இப்படியான முடிவுகள் செயல்பாட்டுக்கு வரும் போது, கார்டுகள் கொடுக்கப்பட்ட நாளில் இருந்தே வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். சேவை மையங்கள் மற்றும் பாய்ண்ட் ஆஃப் சேல்களில் மட்டுமே கார்டுகளை பயன்படுத்த இயலும்.
இதர ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான வசதிகளை கார்ட் வழங்கும் நிறுவனங்கள் ஏற்படுத்தி தர வேண்டும்
தேசிய, சர்வதேச பணப்பரிவர்த்தனைகளுக்கான லிமிட்டேசன்கள், ஏ.டி.எம்., பி.ஒ.எஸ், காண்டாக்ட்லெஸ் பணப்பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பினை நிர்ணயம் செய்தல்
மேலே கூறப்பட்டிருக்கும் பணப்பரிவர்த்தனைகளை 24x7 வாடிக்கையாளர்கள் பல்வேறு வழிகளில் (ஏ.டி.எம்., மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், இண்ட்ராக்டொவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்) பயன்படுத்த ஏற்பாடு செய்தல்.
மேலும் கார்டுகளை வழங்கும் நிறுவனங்கள் முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அலெர்ட்களை எஸ்.எம்.எஸ், மெயில் மூலமாக அனுப்புதல் ஆகியவை ஆகும்.
மேலும் படிக்க : க்ரெடிட் கார்ட் பயன்படுத்தும் போது இந்த 5 தவறுகளை எப்போதும் செய்யாதீங்க!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.