scorecardresearch

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் இவ்வளவா?

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 45.60 சதவீதம் அதிகரித்து 891 கோடி ரூபாயாக உள்ளது.

Reliance Industries Limited annual report of 2018 - 2019
Reliance Industries Limited annual report of 2018 – 2019

Reliance Industries Limited annual report of 2018 – 2019 : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  முகேஷ் அம்பானி தலைமையிலான இந் நிறுவனம் இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 6.82 சதவீதமாக உயர்ந்து, 10,104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
இது முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் 1.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில் சென்ற ஆண்டு இந்நிறுவனத்தின் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Reliance Industries Limited annual report of 2018 – 2019

இந்நிலையில்,பெட்ரோ கெமிக்கஸ் வணிகத்தில் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டில் 7,857 கோடி ரூபாயாக இருந்த வரிக்கு முந்தைய வருவாய் 7,508 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் சென்ற நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 45.60 சதவீதம் அதிகரித்து 891 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த காலாண்டில் மட்டும் ஜியோவில் 3.38 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளார்கள்.

5,315 கோடி ரூபாயிலிருந்து 4,508 கோடி வருவாய் எண்ணெய் சுத்திகரிப்பின் மட்டும் சரிந்துள்ளது.

ரீடெயில் வணிகத்தின் வருவாய் 1,069 கோடி ரூபாயிலிருந்து 1,777 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2019ம்ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் வெளியிட இருந்த நிலையில் அதன் பங்குகளில் 12.80 புள்ளிகள் என 1.01 சதவீதம் சரிந்து 1,249 ரூபாய் ஒரு பங்கு என இருந்தது.

மேலும் படிக்க :WhatsApp New Update : வாட்ஸ்ஆப் மூலம் இனி மிக எளிதாக பணம் அனுப்பலாம்…!

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Reliance industries limited annual report of 2018

Best of Express