Whatsapp Pay Service: வாட்ஸ்ஆப் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வது குறித்த சோதனை முடிவுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது வாட்ஸ்ஆப் நிறுவனம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களின் பீட்டா வெர்ஷனில் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் இந்த வருட இறுதியில் இந்த வாட்ஸ்ஆப் பணப்பரிவர்த்தனை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் 40 கோடி இந்திய வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது வாட்ஸ்ஆப். தற்போது 100 மில்லியன் மக்களுக்கு மட்டும் பைலட் மோடில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டே இந்த திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் வாட்ஸ்ஆப் இறங்கியிருந்தாலும். இந்திய சட்ட திட்டங்களுக்கு ஏற்ற வகையில் அவை இல்லை என்று சில காலம் இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக வாட்ஸ்ஆப் உதவியுடன் உடனுக்குடன் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் பேங்க், மற்றும் எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளுடன் மட்டுமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Whatsapp security features : இந்த ஆப்சன்களையெல்லாம் டிக் செய்யுங்க… தொல்லையில்லாம வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க!
WhatsApp money new update : வாட்ஸ்ஆப் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது எப்படி?
முதலில் உங்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்யுங்கள்.. அதில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வசதி வந்திருந்தால் மட்டுமே இந்த வழிகளை தொடரவும்.
வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யுங்கள். வலது புறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யுங்கள். அதில் பேமெண்ட் ஆப்சன் வரும்.
அதில் உங்களின் வங்கி கணக்கினை இணைத்துக் கொள்ளுங்கள். தங்களுடைய அலைபேசி எண்களை வங்கிக் கணக்குகளுடன் இணைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும். உங்களின் போன் நம்பரை வெரிஃபை செய்த பிறகு, உங்களின் போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கு விபரங்கள் பட்டியிலிடப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான கணக்கினை தேர்வு செய்யவும்.
உங்களின் வங்கிகளை தேர்வு செய்யும் வசதிகளும் அதில் உருவாக்கப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ, மற்றும் ஆந்திரா வங்கிகள் உள்ளிட்ட பல முக்கியமான வங்கிகளின் பட்டியல்கள் அதில் காட்டப்படும்.
அக்கௌண்ட் செட்டப் முடிந்த பிறகு, காண்டாக்டினை க்ளிக் செய்யவும். அதில் ரூபாய்க்கான சிம்பிளை க்ளிக் செய்யவும்.
எவ்வளவு பணம் அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதை டைப் செய்து, உங்களின் யூ.பி.ஐ. எண்ணை டைப் செய்து அனுப்பவும்.