Whatsapp security features : இந்த ஆப்சன்களையெல்லாம் டிக் செய்யுங்க… தொல்லையில்லாம வாட்ஸ்ஆப் பயன்படுத்துங்க!
WhatsApp Top 5 Security and Privacy Features : ரிப்போர்ட் காண்டாக்ட் அல்லது ரிப்போர்ட் க்ரூப் என்ற ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் பயன்படுத்தி ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.
whatsapp private chats tips to secure private groups
Top 5 Security and Privacy Features of WhatsApp : வாட்ஸ்ஆப் செயலி இன்று அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான செயலியாகும். என்னதான் புதிது புதிதாக தொழில்நுட்பம் வந்தாலும் அது உங்களின் தனிப்பட்ட வாழ்வினையும், சுதந்திரத்தையும் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாததாக இருக்க வேண்டும். வாட்ஸ்ஆப்பில் இருக்கும் இந்த செக்யூரிட்டி செட்டிங்குகளை பயன்படுத்தி இந்த செயலியை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.
Two-step verification
ஜிமெயில், ஃபேஸ்புக், வேர்ட்ப்ரஸ் போன்ற சமூக வலை தள பயன்பாட்டில் இருக்கும் இரண்டு படிநிலை உறுதியாக்கம் (Two-step verification) தொழில்நுட்பம் தற்போது வாட்ஸ்ஆப்பிலும் வர உள்ளது. 6 இலக்க எண்களை கொண்ட இந்த பின் நம்பர்களை பயன்படுத்தி நீங்கள் வெரிஃபிகேசன் செய்து கொள்ளலாம்.
இந்த செட்டிங்கைப் பெற Settings > Account > Two-step verification > Enable – இந்த வழிமுறைகளை பயன்படுத்தவும். பின் நம்பர் மறந்து போனால் நீங்கள் உங்களின் மெயில் ஐ.டி.ஐ பயன்படுத்திக் கொள்ளும் ஆப்சனும் அதில் உண்டு.
ஃபேஸ்புக்கில் என்னடதான் ஸ்கிரீன் கார்ட் போட்டு வைத்தாலும், ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. தனியுரிமை பாதிக்கப்படுவதாக இது இருக்கிறது.. ஆனால் வாட்ஸ்ஆப்பில் அந்த தொல்லை ஏதும் இல்லை. உங்களின் ப்ரொபைல் பிக்சரை யார் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்கேற்றமாதிரி செட்டிங்ஸ் கிடைக்கின்றன. உங்களின் காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டும், அனைவருக்கும், அல்லது யாருக்கும் இல்லை என்ற மூன்று ஆப்சன்களில் நீங்கள் உங்கள் ப்ரொபைல் பிக்சரை மாற்றிக் கொள்ளலாம்.
அதற்கான செட்டிங்கைப் பெற Go to Settings > Account > Privacy > Profile Photos > அதில் “Everyone”, “My Contacts” மற்றும் “Nobody.” என்ற ஆப்சன்கள் இருக்கும்.
Reporting, blocking and more
உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ்கள் வந்தால் அதனை முறையாக ரிப்போர் செய்ய செண்டரின் பெயரை அழுத்தவும். அதில் அவர்களின் ப்ரோஃபைல் இருக்கும். அதன் கீழே ரிப்போர்ட் காண்டாக்ட் அல்லது ரிப்போர்ட் க்ரூப் என்ற ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் பயன்படுத்தி ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.
Security notifications
நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப்பினை ரீ-இன்ஸ்டால் செய்யும் போதோ அல்லது போனை மாற்றம் செய்யும் போதோ செக்யூரிட்டி கோடுகள் மாற்றம் ஏற்படுகின்றன. end-to-end encryption-ஐ மிகவும் பாதுகாப்பான வழியில் செயல்படுத்த Security notifications – ஐ ஆன் செய்ய வேண்டும். அதற்கான செட்டிங்குகளைப் பெற Settings > Account > Security > Show Security Notifications
Request Account info
உங்களின் அக்கவுண்ட் தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் நீங்கள் ‘Request Account info’ இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கிடைக்கப்பெறும் தகவல்களை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளவும் இயலும். Settings > Account > Request account info மூலம் இந்த தகவல்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு Settings > Account > Request account info > Download report என்ற வழிமுறைகளை பயன்படுத்தி ஜிப் ஃபைலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.