George Mathew :
neft money transfer : பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியிலிருந்து பணம் எடுப்பதே ஒரு பெரிய சாகசமாக இருக்கும். வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்துக்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற்குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும்.
ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு எல்லாமே தலைக்கீழாக மாறி போனது. ஒன்றிரண்டு நிமிடங்களில் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
ஏ.டி.எம். வசதி மாதிரி, இன்று வங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தினால், உங்கள் காரியங்களை இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்சம், அலைச்சலும் இல்லை. கண்ணுககுத் தெரியாமல் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்கவும் செய்யலாம்.
அப்படி வங்கிகள் அறிமுக்கப்படுத்திய மிகச் சிறந்த திட்டம் மற்றும் சேவைகளில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷனும் ஒன்று. உங்களுக்கு சொந்தமான வங்கிகளின் ஆன்லைன் இண்டர்நெட் பேக்கிங்கை ஓபன் செய்து விட்டால் போதும் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கணக்கிற்கும் ஆன்லைன் மூலமாகவே பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.
ஒரே வங்கியில் வைத்திருக்கும் பல கணக்குகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அனுப்பலாம். இதில் நெஃப்ட்,ஐஎம்பிஎஸ் என பல வசதிகள் உள்ளன. ஆன்லைன் வங்கி சேவையில் NEFT மூலமாக பணம் அனுப்பினால் பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது 30 முதல் 1 மணி நேரமாவது ஆகும். பணப் பரிவர்த்தனை வரம்பு, வங்கிகளைப் பொருத்து மாறுபடும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமே NEFT மூலமாக பணம் பரிவர்த்தனையைச் செய்ய முடியும்
நெஃப்ட் (NEFT) பத்தாயிரம் ரூபாய் வரை 2 ரூபாய் 50 பைசாவும் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஐந்து ரூபாய். ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை 15 ரூபாயும். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிமாற்றத்திற்கு 25 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதன் கூடவே கூடுதலாக ஜிஎஸ்டி வரி இணைக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு வங்கிகளுக்கு இடையில் உள்ள கணக்குகளுக்கு நெஃப்ட் முறையில் பணத்தை மாற்றும்போது, ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் பகல் நேரங்களில் (திங்கள் – வெள்ளி – காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை; சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை) பணத்தை மாற்றினால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பணம் மாறிவிடும். இது ரிசர்வ் வங்கியின் விதி முறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது.
அடிக்கிற வெயில பிஎப் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நிற்க தேவையில்லை! ஆதாரை இணைக்க இதை செய்தாலே போதும்.
இந்த நெஃப்ட் முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரத்தான் ரிசர்வர்வங்கி தற்போது திட்டமிட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பயன்பாட்டிற்காக இந்த நெஃப்ட் முறையை 24 மணி நேரமும் பயன்பாட்டி வைத்திருக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதுக் குறித்து அதிகாரிகள் மற்றும் வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.