RIL's Mukesh Ambani is Now Richer Than Warren Buffett : ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி தற்போது வாரன் பஃபெட்டை காட்டிலும் அதிக சொத்துகளை (in terms of net worth) கொண்ட பணக்காரராக உயர்ந்துள்ளார். அம்பானியின் செல்வ மதிப்பானது தற்போது 68.3 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 67.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் (Bloomberg Billionaires Index) அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் தொய்வு நிலை காட்டினாலும் ஜியோ டிஜிட்டல் யூனிட்டில் அதிக அளவு முதலீடுகளை செய்தது அந்நிறுவனம். கொரோனா ஊரடங்கு காலத்திலும் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது. Bloomberg Billionaires Index-ல் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு ஆசிய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மட்டுமே.
மேலும் படிக்க : கனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க!
89 வயதான பெர்க்ஷைர் ஹாதவேயின் தலைவரான பஃபெட்டி சொத்து மதிப்பு 2006ம் ஆண்டில் இருந்து குறைந்து வருகிறது. 2006ம் ஆண்டில் இருந்து இதுவரை 37 பில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு சேவைகளுக்காக நிதியாக ஒதுக்கியுள்ளார். ஒராக்கிள் ஆஃப் ஒமாஹா என்று அழைக்கப்படும் வாரன் இந்த வாரம் மட்டும் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தொண்டு செய்ய நிதியாக கொடுத்துள்ளார். ஹூரன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் கூட உலகின் எட்டாவது பணக்காரராக இடம் பெற்றுள்ளார் அம்பானி. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார் அம்பானி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil