savings account for minor : எஸ்பிஐ வங்கி 18 வயதிற்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்குத் தொடங்கவதற்கே இரண்டு சிறப்பாக சேமிப்பு திட்டங்கள் உள்ளனர்.
1. பெஹ்லா கதம் மற்றும் 2. பெஹ்லி உதன்
இந்த இரண்டு சேவிங்ஸ் அக்கவுண்டுகள் குறித்த சிறப்பமசங்கள் மற்றும் சலுகைகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.எஸ்பிஐ வங்கியின் இந்த இரண்டு சேமிப்புத் திட்டங்கள் கீழ் முதலீடு செய்யும் சிறுவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதாவது ஒரு ரூபாய் கூட வங்கி கணக்கில் வைக்காமல் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
பெஹ்லா கதம் :
பெஹ்லா கதம் திட்டத்தின் கீழ் 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் தனிநபராகச் சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.18 வயது நிரம்பாத சிறுவர்கள் இந்தத் திட்டம் கீழ் சேமிப்பு கணக்குத் தொடங்கலாம் என்றாலும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் உடன் இணைந்து ஜாயிண்ட் கணக்காக மட்டுமே தொடங்க முடியும்.
இந்தத் திட்டம் கீழ் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது சிறுவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்தும் கணக்கை நிர்வகிக்கலாம். அல்லது பெற்றோர்களால் சிறுவர்களின் அனுமதி இல்லாமல் கணக்கினை நிர்வகிக்க முடியும்.
சிறுவரின் புகைப்படம் பொதியப்பட்ட ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.இந்தச் சேமிப்பு கணக்கு தொடங்கும் பொதுப் பாதுகாவலர் கீழ் உள்ள சிறியவர் என்ற பெயரில் செக்குகள் வழங்கப்படும்.(10 செக் தாள்கள்)
பெஹ்லி உதன் :
பெஹ்லி உதன் திட்டம் கீழ் 10 வயது நிரம்பியவர்கள் மட்டுமே சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.இந்தத் திட்டம் கீழ் 10 வயது நிரம்பிய சிறுவர்களால் தங்களது பெயரினிலேயே எஸ்பிஐ சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.
18 வயது நிரம்பாதவர்களே தங்களது சேமிப்புக் கணக்கினை நிர்வகிக்கலாம். இதிலும் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும். ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
சிறுவரால் தனது கையெழுத்தினை மாற்றம் ஏதுமில்லாமல் ஒரே மாதிரியாகப் போட முடியும் என்றால் 10 தாள் கொண்ட செக் புத்தகம் விநியோகிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.