savings account interest rate :பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் தங்களை ஒரு அங்கமாக நிரூபித்து வருகின்றனர். வீடுகளில் மட்டும் ஆட்சி கொண்டிருந்த இந்தியப் பெண்கள் இப்பொழுது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆட்சி செலுத்தத் துவங்கி விட்டனர்.
அதிலும் பெண்களை நம்பியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏராளம் என்றால் மிகையாகாது. இது இந்திய நாட்டிற்கு வலுவான வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லுவதற்கு ஒர் அறிகுறி. நிதி மற்றும் வங்கி துறையிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
அதிகபடியான பெண்கள் வங்கியியல் துறை மற்றும் பண மேலான்மையில் பங்கெடுக்கச் செய்யும் வகையில் நிறைய திட்டங்களை இன்றைய வங்கிகள் செய்து வருகின்றனர். பெண்களுக்கு மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் பலன் தரக்கூடியதாகவும் தனித் தன்மையான வசதிகளையும் சில வங்கிகள் வழங்கி வருகின்றன.
இப்படி பெண்களுக்காக சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கும் வங்கிகள் குறித்த முழு விபரம்.
ஐசிஐசிஐ வங்கி :
அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கு - இந்தியாவின் எந்தவொரு பகுதியில் வசித்து வரும் பெண்களுக்கும் இந்த அட்வான்டேஜ் பெண்கள் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். ஜீரோ பேலன்ஸ் கணக்குடன், இலவசமான செக் புத்தகமும் இந்த கணக்கிற்கு வழங்கப்படுகிறது.
இந்த தொடர் வைப்பு கணக்கில் ரூ.10,000 இருக்க வேண்டும். இணையம் மற்றும் மொபைல் வழி வங்கி சேவைகளை இயல்பாகவே வழங்கும் கணக்காக இது உள்ளது. இந்த வசதியின் மூலம் இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும் பயன்படுத்தலாம். எண்ணற்ற தள்ளுபடிகளையும் மற்றும் சலுகைகளையும் அதன் சர்வதேச டெபிட் கார்டுகள் வழியாக வழங்கும் வகையில் இந்த கணக்கு உள்ளது. 18 வயது நிரம்பிய பெண்கள் இந்த கணக்கை தொடங்கலாம்.
எஸ்.பி.ஐ வங்கியில் இப்படியொரு வசதியா? உண்மையாவே சூப்பர்!
எச்டிஎஃப்சி வங்கி :
பெண் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான சேவைகளை எச்டிஎஃப்சி வங்கி வழங்கியுள்ளது. இந்த வங்கி வழங்கும் ஈஸிஷாப் விமன் அட்வான்டேஜ் டெபிட் கார்டு மூலம் பெண்கள் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையிலும் பணம் எடுக்கவும் மற்றும் ரூ.40,000 வரையிலும் பொருட்களை கடைகளில் வாங்கவும் முடியும்.
விபத்து மூலம் மரணம் சம்பவித்தால் ரூ.10 லட்சம் மற்றும் விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் என காப்பீடும் செய்து தருகிறது இந்த வங்கி.
தங்க நகை கடன்களைப் பொறுத்த வரையில் இந்த வங்கி சிறப்பான தள்ளுபடி திட்டங்களை கொண்டுள்ளது.