எஸ்.பி.ஐ வங்கியில் இப்படியொரு வசதியா? உண்மையாவே சூப்பர்!

பாஸ்புக் தகவல் உட்பட அக்கவுண்ட் விவரம் என அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

By: March 8, 2019, 2:45:15 PM

SBI Anywhere : எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை அனைவரிடம்  பாராட்டுக்களை பெற்று வருகிறது. வீட்டில் இருந்தப்படியே வாடிக்கையாளர்கள் வங்கியின் புதிய திட்டம் தொடங்கி பணம் எடுப்பது வரை அனைத்து வசதிகளை  தெரிந்துக் கொள்ளலாம். அதனை உடனடியாக செயல்படுத்தவும் முடியும்.

நேற்றைய தினம், எஸ்பிஐ வங்கியின் மிகச் சிறந்த சேவையில் ஒன்றான எம்.பாஸ்புக் வசதி பற்றி தெரிந்துக் கொண்டோம். இன்றைய தினம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்த தகவல்களை வங்கிக்கு நேரில் செல்லாம் ஆன்லைன் மூலமாகவே எப்படி தெரிந்துக் கொள்ளலாம் என்ற தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

இதில் வாடிக்கையாளர்களை கவர்ந்த முக்கியமான சிறப்பம்சம் என்றவென்றல், நீங்கள் உங்கள் அக்கவுண்ட் விவரங்களை தெரிந்துக் கொள்ள ஒவ்வொரு முறையும் லாகின் செய்து பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதுவுமில்லை.

எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ் பாஸ்புக் வாங்க சிரமப்படவே வேண்டாம்! இதோ ஈஸி வழி.

SBI Anywhere செயலியை டவுன்லோட் செய்து உங்கள் வங்கி கணக்கு குறித்து எல்லா தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு எல்லாமே ஈஸி தான்.

எப்படி பார்க்கலாம்?

‘SBI Anywhere’ செயலியை டவுன்லோட் செய்த பின்பு more ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு லாகின், பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை. உள்ளே சென்ற பின்பு உங்களின் பாஸ்புக் தகவல் உட்பட அக்கவுண்ட் விவரம் என அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த செயலில் ஆப் லைனிலும் செயல்படும் என்பது கூடுதல் தகவல்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Business News by following us on Twitter and Facebook

Web Title:Sbi anywhere how to check balance on phone without using login password

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X