SBI Net Banking Alert : எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் வங்கி மெசேஜ் என எந்தவொரு போலியான அறிவிப்பை கண்டு ஏமாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளது.
State Bank of India Issues Guidelines for Customers: முக்கிய அறிவிப்பு!
வாடிக்கையாளர்கள் வங்கி மெசேஜ் என எந்தவொரு போலியான அறிவிப்பை கண்டு ஏமாற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளது.பணப்பரிமாற்றங்கள் மின்னணு பரிமாற்றமாக மாற்றம் பெற்றதில் ஆபத்தும் இருக்கிறது.
உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களின் அழைப்பை விட அநாமதேய நபர்களின் அழைப்புகள் நமது செல்போனிலும், மின்னஞ்சலிலும் வந்து கொண்டே இருக்கிறது. வங்கிக் கணக்கு விவரங்களையும், கடவுச் சொற்களையும் கேட்கும் அவர்களின் நல்ல நோக்கத்தில், நமது துரதிர்ஷ்டமும் மறைந்து கிடக்கிறது.
இதிலிருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற எஸ்பிஐ வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கி கணக்கில் பணம் திருடப்படுவதில் இருந்து தப்பிப்பதற்கு உங்கள் மெயில் அக்கவுண்ட் மற்றும் முக்கிய பாஸ்வர்டுகளை அடிக்கடி மாற்றம் செய்வது, உங்கள் அக்கவுண்ட் தொகையை அவ்வப்போது சரி பார்த்து கொள்ளவும்.
வங்கியில் இருந்து பேசிகிறோம் உங்கள் கார்டு நம்பர் சொல்லுங்கள் என்று எந்த அழைப்பு வந்தாலும் நாம் அவற்றிற்கு பதில் அளிப்பதை விட வங்கி நமது நிறுவனத்தின் அருகிலோ மற்றும் வீட்டின் அருகில் இருக்கும் தயவு செய்து வங்கியில் நேரில் சென்று தகவல்களை பெற்றுக் கொள்ளவும், போனில் எல்லா விவரங்களையும் பகிர வேண்டாம்.
சூப்பர் எஸ்.பி.ஐ...வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!