By: WebDesk
Updated: February 1, 2019, 04:25:02 PM
state bank of india atm transaction
sbi atm : எஸ்.பி. ஐ வங்கியின் சேவிங்ஸ் அல்லது சேலரி அக்கவுண்டை போன் செய்து விட்டு, அதே வங்கியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மறக்காமல் இந்த தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா முழுவதும் டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. துவக்கத்தில் ஏடிஎம்களில் பணம் எடுக்க வசூலிக்கப்பட்ட கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்த வங்கிகள், மீண்டும் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.
தற்போது பல வங்கிகள், சில மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச அளவு பரிவர்த்தனைகளை மட்டுமே இலவசமாக வழங்குகின்றன. நாட்டில் அதிக அளவு ஏடிஎம்-களை கொண்டுள்ள பிரபல வங்கிகள் விதிக்கும் கட்டணங்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வங்கியை பொறுத்தவரை, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்-களில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால் மற்ற வங்கிகளின் ஏடிஎம்-மை பயன்படுத்தும்போது, குறைந்தபட்சம் ஐந்து முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன.
5வது முறைக்கு மேல், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கு 20 ரூபாயும், பணம் இல்லாத பரிவர்த்தனைகளுக்கு 6 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஏடிஎம்-களில், பண பரிவர்த்தனைக்கு 169 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 17 ரூபாயும் வசூலிக்கப்படும்.
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் அதன் ஏடிஎம்களை பயன்படுத்தும் போதும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், மற்ற வங்கிகளின் ஏடிஎம்-களில் செய்யப்படும் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அது, பண பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி, பணமில்லா பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி; 5 தான் உச்சவரம்பு. அதற்கு பின், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாய் வசூலிக்கப்படும்.