sbi atm password secure tips state bank of india - ஏடிஎம் கதவை திறப்பதற்கு முன் இதை படிச்சிட்டு போங்க - எஸ்பிஐ
State Bank Of India: திடீரென்று நமது மொபைலுக்கு ஒரு மெசேஜ் வரும். உங்கள் அக்கவுன்ட்டில் இருந்து 85,000 ரூபாய் டெபிட் செய்யப்பட்டுள்ளது என்று. அப்போது உங்கள் இதயம் துடிக்க மறந்து நின்று போகும் பாருங்க, அது கொடுமையான தருணம். நம்மை சுற்றி இருப்பவர்கள், நமது பக்கத்து வீட்டுக்காரர், ஏன் நாமே என்று இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது நாம் செய்யத் தவறும் செயல் தான் பணத்தை நாம் இழக்க முதன்மையான பங்கு வகிக்கிறது. உங்கள் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் பின் கோட் உள்ளிட்டவற்றை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும், பணம் எடுக்கும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய மிக மிக எளிய நடைமுறைகளை பட்டியலிட்டு எஸ்பிஐ வங்கி ட்வீட் செய்துள்ளது.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, உங்கள் கையைக் கொண்டு கீபேடை மறைத்து பாஸ்வேர்டு டைப் பண்ணுங்க.
உங்கள் பின் நம்பர் மற்றும் கார்டு விவரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் மற்றவர்களிடம் பகிராதீர்கள். நெருங்கிய நபர்களாக இருந்தாலும் தவிர்ப்பதே நல்லது.
உங்கள் கார்டில் பின் நம்பரை கண்டிப்பாக எழுதாதீர்கள்.
உங்கள் கார்டு விவரம் குறித்தோ, பின் நம்பர் விவரம் குறித்தோ உங்கள் மொபைலுக்கு மெசேஜோ, ஃபோன் அழைப்போ வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம். இ-மெயில் வந்தாலும் ரெஸ்பான்ஸ் பண்ண வேண்டாம்.
உங்கள் பின் நம்பர் உங்கள் பிறந்தநாளை குறிக்கும் படி வைக்க வேண்டாம். பெரும்பாலானோர் செய்யும் முதல் தவறு இது தான்.
உங்கள் பரிவர்த்தனை சீட்டை தூரப் போடுங்கள் அல்லது கையோடு எடுத்துச் செல்லுங்கள். ஏடிஎம் அறைக்குள் போட வேண்டாம்.
பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு முன்பு, ஸ்பை கேமராக்கள் எங்காவது பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணியுங்கள்.
கீபேட் மேல் அதைப் போன்ற போலி கீபேட் தயாரித்து கொள்ளை அடித்து வருகின்றனர். ஆகையால், keypad manipulation, heat mapping shoulder surfing போன்றவை என்ன என்பதை கூகுளில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அட, பணம் எடுக்குறதுக்கு இவ்ளோ அட்ராசிட்டியா என்று நினைக்க வேண்டாம். சின்ன சின்ன விஷயங்களில் தான் பெரிய இலக்குகள் அடையப்படுகின்றன.