sbi atm pin generation: எஸ்பிஐ ஏடிஎம்மில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இன்று தீர போகிறது. எஸ்பிஐ கார்டை மட்டும் வங்கியில் பெற்றுக்கொண்டு அதன் பின் நம்பரை எப்படி ஜென்ரேட் செய்வது என்று தெரியாமல் தவிப்பவர்கள் கட்டாயம் இந்த செய்தியை பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முன்பெல்லாம் எஸ்பிஐ ஏடிஎம் கார்டை வங்கிக்கு சென்று பெறும்போது அதில் தரப்படும் ஆவணத்தில் ரகசிய எண்கள், அதாவது ஏடிஎம் பாஸ்வேர்ட் பதிவு செய்து தரப்படும்.
Advertisment
அந்த பின்னையே வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமாகவே ஏடிஎம் கார்டை பெறுவதால் புதியதாக நீங்கள் தான் ரகசிய எண்ணை உருவாக்கி கொள்ள வேண்டும்.
அதற்கு இருக்கும் ஒரே வழி, ஏடிஎம். எஸ்பிஐ ஏடிஎம் சென்று நீங்கள் எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் முறையான நீங்கள் பயன்படுத்து மொபைல் எண்ணை வங்கியிடம் தந்து இருக்க வேண்டும். அதுமட்டுமில்லை ஏடிஎம் செல்லும் போது கட்டாயம் மொபைல் ஃபோனையும் கையில் கொண்டு செல்ல வேண்டும்.
ஏனென்றால் அந்த மொபைல் எண்ணிற்கு தான் ஓடிபி வரும். அந்த ஓடிபியை மீண்டும் ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் ரகசிய எண்ணை உருவாக்க முடியும். இதை செய்ய 10 நிமிடம் போதுமானது.