இனி சேவிங்ஸ் கணக்கில் இவ்வளவு தான் வட்டி- எஸ்பிஐ அறிவிப்பு

வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது.

Sbi,savings,account,deposit, bank
Sbi,savings,account,deposit, bank

எஸ்பிஐ வங்கி யானது பொதுத்துறை வங்கிகளில் சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. இது தற்போது சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி குறித்த விளக்கத்தை அளித்துள்ளது.வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக சமீப காலமாக எஸ்பிஐ வங்கி பல அறிவிப்புகளை விடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி, குறைந்த மற்றும் நீண்ட கால வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 0.50% வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

ஒருபக்கம் ஆர்பிஐ யின் ரெப்போ வங்கியின் மாற்றத்தால் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதத்தை குறைத்த எஸ்பிஐ இந்த முறை வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில் கையை வைத்து விட்டது.

2முதல் 3 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சி கொண்ட வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.75%-லிருந்து 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை மீதான வட்டி வீதம் 6.25%-மாக குறைக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் நியூ ரூல்ஸ்! பார்த்து இருங்க மக்களே.

இந்த வைப்பு தொகை காலம் மீதான மூத்த குடிமக்களுக்கான வட்டி வீதமானது 6.75%-மாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் வரையிலான வைப்பு தொகை வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: State bank of india savings account

Next Story
பிஎஃப் சேமிக்க தொடங்கியுள்ளீர்களா? இந்த தகவலைப் படியுங்கள்Pf,rules, interest,apply, பிஎஃப், சேமிப்பு,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com