SBI ATM Rule: எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, சேவை கட்டணம் பிடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே பணம் எடுக்க முயற்சிக்கும் முன்பு, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருக்கிறதா? தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை வாடிக்கையாளர் நன்கு உறுதிப் படுத்திக் கொள்வது உத்தமம்!
எஸ்பிஐ வங்கி, பொதுத்துறை வங்கிகளிலேயே சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ‘பெருநகரங்களில், ஐந்து முறை, எஸ்.பி.ஐ., வங்கி, ஏ.டி.எம்., இயந்திரத்திலும், மூன்று முறை பிற வங்கிகளிலும், எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள், இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளது. மேலும் இது, பெரு நகரம் அல்லாத பகுதிகளில், 10 முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலவச பரிவர்த்தனைகளை கடந்த சேவைகளுக்கு, 5 முதல், 20 ரூபாய் உடன், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில், வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது கணக்கில் பணம் இல்லையென்றாலோ, 20 ரூபாய் சேவை கட்டணம் பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கார்டு இல்லா பரிவர்த்தனைக்கான கட்டணம், 22 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் , எஸ்.பி.ஐ வங்கியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே பணம் எடுக்க முயற்சிக்கும் முன்பு, அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருக்கிறதா? தனது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை வாடிக்கையாளர் நன்கு உறுதிப் படுத்திக் கொள்வது உத்தமம்!