sbi latest updates: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க, ஓடிபி (ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்) முறையை, ஜன.1 2020 முதல் அமல்படுத்தியுள்ளது.
OTP எண் மூலம் பரிவர்த்தனை
இதன்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் போது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.
ATM cash withdrawals now made even safer, with the OTP-based authentication process from #SBI, in effect from 1st January, 2020! Register your mobile number at the nearest SBI branch or ATM to benefit from this service.#SafeBankingInitiative #ATM #Cash #OTP #NewYear2020 pic.twitter.com/BOIHssxVMy
— State Bank of India (@TheOfficialSBI) January 1, 2020
எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளில் நீங்கள் இந்த பரிவர்த்தனையை செய்யும் போது, otp இல்லாமல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
2019ம் ஆண்டில் தொழிலாளர்களுக்காக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
SBI ஏடிஎம்மில் மட்டுமே
இந்த ஓடிபி எண்ணை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்த முறை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்.களில் மட்டுமே செயல்படும்.வேறு வங்கி ஏ.டி.எம்.களில் இத்திட்டம் பொருந்தாது.
ஏற்கனவே, ஏ.டி.எம். கார்டுகள் இல்லாமலே பணம் எடுக்கும் யோனோ கேஷ் என்ற வசதியை, எஸ்.பி.ஐ. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
National Savings Scheme: மாதம் ரூ.5700 வரை சம்பாதிக்கும் அருமையான வாய்ப்பு