sbi atm statebank atm state bank of atm : பணத்தை சேமிப்பதற்காகவே தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் இந்த டிஜிட்டல் உலகில் எத்தனையோ மாற்றங்களை கண்டு விட்டன. முன்பெல்லாம் நாம் என்ன செய்வோம்? பணத்தை டெபாசிட் செய்வோம், தேவைப்பட்டால் எடுப்போம். அதை தவிர வங்கிக்கு பாஸ்புக் எண்ட்ரி போட செல்வோம்.
Advertisment
sbi atm statebank atm state bank of atm : தெரிஞ்சுகோங்க!
அதன்பின்பு, வங்கிக்கு போகாமலே பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு அறிமுகமாகியது. அதன் பின்பு மற்றவர்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய நெட் பேக்கிங் வசதியும் வந்தது. இப்போது அதையும் தாண்டி டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. பொதுத்துறை வங்கியில் தனக்கென தனி அடையாளத்தை சம்பாதித்தி வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கியில் இருக்கும் அட்டகாசமான வசதி பற்றி தான் இங்கே பார்க்க போகிறீர்கள்.
இந்தியாவிலேயே முதன் முறையாக யோனோ கேஷ் ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம் – களில் பணப்பவர்த்தனை செய்யலாம். இந்த வசதி இந்தியா முழுவதும் உள்ள 16,500 ஏடிஎம்-களில் செயல்பாட்டில் உள்ளது. எஸ்பிஐ – யின் இந்த சிறப்பு சேவையை வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். மிகவும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்று.
அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் யோனோ. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் ஐபோன் போன்களுக்கு பிரத்யேகமாக எஸ்பிஐ யோனோ மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன. //www.sbiyono.sbi என்ற இணையதளமும் உள்ளது.
இவற்றின் மூலம் கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். புதிய கணக்கு தொடங்குவதற்கு வசதி உள்ளது. பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவது போன்ற பொதுவான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.