மினிமம் பேலன்ஸை முறையாக பின்னபற்றவில்லை என்றால் அபராதம் எனபது மட்டுமில்லாமல் வங்கிகள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கின்றன.
அவை சிறிய அளவாக இருப்பதால் நமது கண்களுக்குப் படுவதில்லை. ஆனால் அவை எல்லாவற்றையும் நீங்கள் முறைபடி கவனித்தால் ஒரு மாதத்திற்கு மட்டும் உங்களிடம் வங்கிகள் வசூலிக்கும் கட்டணத் தொகை தெளிவாக விளங்கி விடும்.
எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான பிரத்யேக பகிர்வு. எஸ்.பி. ஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த முழு தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.
1. ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் போது இலவச பரிவர்த்தனை அளவினை கடந்தால் 20 ரூபாய் வரை ஜிஎஸ்டி உடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஹோம் லோன் முக்கியம் தான்.. ஆனால் அதை விட முக்கியம் வட்டி பற்றி தெரிந்துக் கொள்வது!
2. இதுவே நிதி இல்லா பரிவர்த்தனை என்றால் 8 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் ஆகும்.
3. அதுமட்டும் இல்லாமல் 125 ரூபாய் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணமாகவும் வசூலிக்கிறது.
4 மாதத்திற்கு மூன்று முறை ரோக்க பணத்தினை எந்தக் கட்டணமும் இல்லாமல் டெபாசிட் செய்யாலாம். இதுவே கூடுதலாகச் செய்தால் 50 ரூபாய் உடன் ஜிஎஸ்டி சேர்த்துக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
5. ஒவ்வொரு காலாண்டிற்கும் 15 ரூபாய் உடன் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
6.எஸ்பிஐ வங்கி கணக்கில் 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கிளைகள் உள்ள பகுதிகளுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச இருப்பு தொகையானது இருக்க வேண்டும். இல்லை என்றால் 20 முதல் 50 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
7. என்ஈஎப்டி பரிவர்த்தனை செய்யும் போது 2.50 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். இதுவே ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் முதல் 56 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.
பொங்கல் ஷாப்பிங் அப்புறம் இருக்கட்டும்..2 நாளைக்கு பேங்க் கிடையாது!
8. ஆண்டுக்கு 25 தாள்கள் கொண்ட செக் புக்குகள் இலவசம், அதற்கு அடுத்த 25 தாள் செக் புக்கிற்கு 75 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.