sbi current account : மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ -யில் நடப்பு கணக்கு ( current account ) மெயிண்டேன் செய்பவர்களுக்காகவே இந்த தகவல்.
பெரும்பாலும் வணிகர்கள், வணிக நிறுவனங்கள், வணிகக் குழுமங்கள் நடப்பு கணக்கை வைத்திருப்பார்கள். இந்த கணக்கில் சேமிப்பு அக்கவுண்டை போலவே டெபாசிட், பணம் திரும்பிப் பெறுதல் போன்ற அனைத்து விதமான வங்கி சேவைகளும் கிடைக்கும்.
இந்த அக்கவுண்டில் வரம்பற்ற பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.வங்கியின் எந்தக் கிளைகளிலிருந்தும் கரண்ட் அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்ய மற்றும் திருப்பி எடுக்க அனுமதி உண்டு.ஓவர் டிராஃப்ட் சேவை மூலம் கரண்ட் அக்கவுண்டில் உள்ள பணத்தைவிடக் கூடுதலான பணத்தை எடுக்க முடியும். ஆனால் இதற்கு வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அக்கவுண்டில் பேங் ஸ்டேட்மேண்டை மாதம்/காலாண்டு, அரையாண்டு/ஆண்டு வாரியாகப் பெற முடியும். அதே போல் கரண்ட் அக்கவுண்டில் உரிமையாளர்க்கு தனிநபர் விபத்து காப்பீடும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது.
இணையதள வங்கி சேவை, செக் புக், டிமாண்ட் டிராஃப்ட் போன்ற வசதிகளும் உள்ளன. இவற்றின் மூலம் வணிக பரிமாற்றங்களை மிக எளிதாகச் செய்யலாம்.சிறு வணிகம் செய்பவர்கள் கரண்ட் அக்கவுண்டை பயன்படுத்தும்போது, புதியதாக வணிகம் தொடங்க கடன் பெறுவது எளிதாக இருக்கும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இதைவிட என்ன குட் நியூஸ் சொல்ல முடியும்.
இந்த அக்கவுண்டில் வைத்துள்ள இருப்புத் தொகைக்கு வட்டி விகித லாபம் கிடைக்காது. ஆனால் சேமிப்புக் கணக்குகளில் வைத்துள்ள பணத்திற்கு வட்டி விகித லாபம் கிடைக்கும்.
சேமிப்புக் கணக்குடன் ஒப்பிடும் போது குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகமாக இருக்கும்.
கரண்ட் அக்கவுண்டில் பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகமாக இருக்கும்.
தினசரி ரொக்கப் பரிவர்த்தனைக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், பிற பரிவர்த்தனைகளை எவ்வளவு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.