இதை செய்யவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும்; எச்சரிக்கை செய்யும் எஸ்.பி.ஐ.

வங்கி சேவைகள் முடங்கினால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியாது

SBI Bank Alert Tamil News

SBI customers ALERT : These account holders have to submit Aadhaar-PAN card : கே.ஒய்.சி. விவகாரங்களை மே 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது எச்.பி.ஐ. ஆனால் அதனை முடிக்காதவர்களுக்கு மீண்டும் காலக்கெடு வழங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை வங்கியில் இணைக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு அவர்களுக்கான சேவைகள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது எஸ்.பி.ஐ.

மேலும் படிக்க : எஸ்பிஐ, பின்பி, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!

உங்களின் எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு முடக்கப்பட்டால் என்ன நடக்கும்?

உங்கள் வங்கியில் உள்ள பணத்தை நீங்கள் பயன்படுத்த இயலாது. நீங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெறும் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படும் மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ முடியாது. இதனால் தான் பலரும் தங்களின் ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை வங்கிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கி வருகின்றனர்.

யாரெல்லாம் இந்த தகவல்களை வழங்க வேண்டும்?

ஏற்கனவே ஆதார் அடையாள அட்டையோடு பான் கார்டு அட்டை தகவல்களை இணைத்திருந்தால் அவர்கள் இந்த ஆவணங்களை வழங்க வேண்டியதில்லை. அப்படி செய்யாத பட்சத்தில் நீங்கள் ஆதார் மற்றும் பான் அட்டை தகவல்களை வழங்க வேண்டும்.

உங்களின் ஆதார் கணக்கோடு பான் அட்டை தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முதலில் நீங்கள் uidai.gov.in இணையத்திற்கு செல்ல வேண்டும். அதில் ‘Check Aadhaar/Bank Account Linking Statue என்பதை க்ளிக் செய்து அதில் ஆதாரின் 12 இலக்க எண்களை உள்ளீடாக செலுத்த வேண்டும். அப்போது உங்களுக்கு ஓ.டி.பி. ஒன்று கிடைக்கும். இதனை நீங்கள் பயன்படுத்தி நீங்கள் லாக்-இன் செய்த பின்னர் பான் அட்டை தகவல்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi customers alert these account holders have to submit aadhaar pan card

Next Story
எஸ்பிஐ, பின்பி, கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்!canara Bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com