எஸ்பிஐ கடன் தவணை கணக்கீடு: 15 வருட வீட்டுக் கடனுக்கு கூடுதலாக வட்டி எவ்வளவு தெரியுமா?

SBI: இன்னும் 15 ஆண்டுகள் மீதமுள்ள முதிர்ச்சியுடன் ரூபாய் 30 லட்சம் கடனுக்கு கூடுதல் வட்டியாக ரூபாய் 4.54 லட்சம் வரை செலுத்தவேண்டி வரும் இது கூடுதலாக 16 மாத தவனைகளுக்கு சமமானது.

By: June 3, 2020, 8:40:03 AM

State Bank Of India: கடன்களுக்கான மாத தவணையை இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வங்கிகளை அனுமதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவைத் தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கியும் கடன் மாத தவணை ஒத்திவைப்பதை மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த வசதி தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களின் அனைத்து கடன் கணக்குகளுக்கும் கிடைக்கிறது.


சுமார் 85 லட்சம் தகுதியான வாடிக்கையாளர்களிடம் கடன் மாத தவணையை ஒத்திவைப்பது குறித்தான அவர்களின் விருப்பத்தை அறிய எஸ்பிஐ எளிமையாக குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொண்டுள்ளது. வங்கி அனுப்பும் குறுஞ்செய்தியில் அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள விர்ச்சுவல் கைபேசி எண்ணில் (virtual mobile number- VMN) கடன் மாத தவணையை ஒத்தி வைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் “YES” என்று பதிலளிக்க வேண்டும். மாத கடன் தவணையை ஒத்தி வைக்க வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் குறுஞ்செய்தியை பெற்ற 5 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

எஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க! வட்டி முழு விவரம்

கடன் மாத தவணையை ஒத்தி வைப்பதால் ஏற்படும் தாக்கம்.

வாகன கடன் மற்றும் வீட்டு கடன் மாத தவணையை அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைப்பதால் ஏற்படும் தாக்கத்தைக் குறிக்கும் கணக்கீடுகளை எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அது குறித்துப் பார்ப்போம்.

வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்

1. முதல் மூன்று மாத கடன் தவணை ஒத்தி வைப்பை பெற்றவர்கள் மற்றும் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைப்பு நீட்டிப்பு வேண்டுபவர்கள்

இன்னும் 15 ஆண்டுகள் மீதமுள்ள முதிர்ச்சியுடன் ரூபாய் 30 லட்சம் கடனுக்கு கூடுதல் வட்டியாக ரூபாய் 4.54 லட்சம் வரை செலுத்தவேண்டி வரும் இது கூடுதலாக 16 மாத தவனைகளுக்கு சமமானது.

இன்னும் 54 மாதங்கள் மீதமுள்ள முதிர்ச்சியுடன் ரூபாய் 6 லட்சம் வாகன கடனுக்கு கூடுதலாக ரூபாய் 36,000/- செலுத்த வேண்டிவரும் இது 3 மாத தவனைகளுக்கு சம்மானது.

2. முதல் முறையாக கடன் மாத தவணையை ஒத்தி வைக்க விரும்புபவர்கள்

இன்னும் 15 ஆண்டுகள் மீதமுள்ள முதிர்ச்சியுடன் ரூபாய் 30 லட்சம் கடனுக்கு கூடுதல் வட்டியாக ரூபாய் 2.34 லட்சம் வரை செலுத்தவேண்டி வரும் இது கூடுதலாக 8 மாத தவணைகளுக்கு சமமானது.

மத்திய அரசின் இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்களா? எஸ்.பி.ஐ புதிய வசதி

இன்னும் 54 மாதங்கள் மீதமுள்ள முதிர்ச்சியுடன் ரூபாய் 6 லட்சம் வாகன கடனுக்கு கூடுதலாக ரூபாய் 19,000/- செலுத்த வேண்டிவரும் இது கூடுதலாக 1.5 மாத தவணை செலுத்துவதற்கு சமமானது.

நீங்கள் கடன் மாத தவணையை பெற விரும்புகிறீர்களா? கடன் மாத தவணை ஒத்தி வைப்பு வசதியை பெறாமல் இருப்பது நல்லது என்பது அறிவுறுத்தப்படுகிறது. தங்களது கடன் மாத தவணையை ஒத்தி வைக்க வேண்டாம் என்னும் வாடிக்கையாளர்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் அவர்கள் தொடர்ந்து மாத தவணையை செலுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietami

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi emi moratorium calculation state bank of india sbi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X