sbi fd rates : பிக்சட் டெபாசிட் மூலம் பெறப்படும் வட்டிக்கு முழுமையாக வருமான வரி உண்டு. வட்டித் தொகை ஓராண்டுக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு மேலே போனால், அந்தத் தொகையை நீங்கள் பெறுவதற்கு முன்பே வங்கியானது 10.3 சதவீத வரியைக் கழித்துக்கொள்ளும். அத்துடன் முடிந்துவிடுவதில்லை. உங்களின் வருடாந்திர வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் என்றால், இந்த வருவாயில் கூடுதல் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும்.
டி.டி.எஸ். தொகை பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், பிக்சட் டெபாசிட்கள், பத்திரங்கள் மூலமான வருமானம் குறித்து வருமான வரிக் கணக்கில் நீங்கள் தெரிவிக்க வேண்டும். வட்டிக்கான வரியானது பணம் சேரும் அளவு அடிப்படையில் கணக்கிடப்படும்.
நீங்கள் உங்கள் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்தாலும் உங்களால் வரியைத் தவிர்க்க முடியாது. நீங்கள் உங்கள் மனைவி அல்லது குழந்தைக்குக் கொடுக்கும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை என்றாலும், அத்தொகை முதலீடு செய்யப்படும்போது அதன் மூலமë கிடைக்கும் வருமானம், பணம் கொடுத்தவரின் வருவாயுடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும். எனவே ஒருவர் தனது மனைவி பெயரில் பிக்சட் டெபாசிட்களில் பணம் போடுகிறார் என்றால், கிடைக்கும் வட்டியானது கணவரின் வருமானமாகக் கருதப்படும்.
இப்படி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு யோசிக்க வேண்டிய விஷயங்கள், கவனித்து செயல்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளனர். அதே போல் நீங்கள் பிக்சட் டெபாசிட் செய்வது உறுதி என்ற முடிவு செய்து விட்டீர்களா? அப்ப நீங்கள் அதை செயல்படுத்த சரியான வங்கியை தேர்ந்தெடுப்பது முறையான ஒன்று.
அந்த வகையில் உங்களுக்கு உதவுவது தான் இந்த செய்தியின் நோக்கம். பிக்சட் டெபாசிட் செய்ய வங்கியை தேடுபவர்கள் இதை படித்து விட்டு மற்றவர்களுக்கு பகிருங்கள்.
எஸ்பிஐ தற்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 5 வருடம் முதலீடு செய்யும் போது 6.80% டூ 7.30% சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. அதில் 1.20 லட்சம் ரூபாயினை 5 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது முதிர்வடையும் போது 143,549 ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும.
read more.. உங்கள் பணத்தை சேமிக்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்குமா? உடனே செல்லுங்கள் எஸ்பிஐ வங்கிக்கு!
இதுவே 10 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 207,162 ரூபாயாகக் கிடைக்கும். வருமான வரி விலக்கு கிடைக்கும். மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் என்றால் 10 வருடத்தில் 3,07,705 ரூபாயாக லாபம் கிடைக்கும்.
5 வருட வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது லாபமாக வரும் வட்டி தொகைக்கு வருமான வரித் துறை வரி விலக்கு அளிக்கிறது. அதுவும் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் தான்.
எனவே, எஸ்பிஐ தரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை உடனே தொடங்குகள்.