sbi mods interest rate : எம்.ஓ.டி.எஸ். எனப்படும் பல்வாய்ப்பு டெபாசிட் திட்டம் எஸ்பிஐ வங்கியில் இருக்கும் அற்புதமாக திட்டங்களில் ஒன்று.
சேமிப்பு கணக்குடன் இந்த திட்டத்தை இணைத்துக் கொள்ளலாம். வழக்கமான வைப்புத் தொகை கணக்குகளுக்கு மாற்றமாக, எம்.ஓ.டி.எஸ். அக்கவுன்ட் வைத்திருப்பவர்கள் ரூ. 1,000-ன் மடங்குகளாக பணத்தைஎடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள தொகை சேமிப்பு கணக்கில் வைப்புத் தொகையாக இருக்கும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
1.குறைந்தபட்ச பேலன்ஸ்: ஒவ்வொரு அக்கவுன்ட்டிலும் குறைந்தபட்ச பேலன்ஸ் ரூ. 1,000- ஆக இருக்க வேண்டும். அடுத்தடுத்த டெபாசிட் தொகைகள் ரூ. 1,000-ன் மடங்குகளாக இருக்க வேண்டும். இதற்கு உச்ச பட்ச தொகை என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
2. கால அளவு: குறைந்தபட்ச கால அளவு ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளுக்கு அதிகபட்ச கால அளவு 5 ஆண்டுகள்.
3. வட்டி விகிதம்: மற்ற திட்டங்களுக்கு என்ன வட்டி விகிதத்தை வழங்குகிறதோ அதே வட்டியை எம்.ஓ.டி.எஸ். திட்டத்திற்கும் ஸ்டேட் வங்கி வழங்குகிறது. கடந்த ஜூலை 30-ம் தேதியில் இருந்து வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. ரூ. 1 கோடிக்கு குறைவாக டெபாசிட் செய்யும் பணங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் அதிகம்.
4. முன்முதிர்வு திரும்ப பெறுதல்: எம்.ஓ.டி.எஸ். வங்கி கணக்குகளுக்கு முன்முதிர்வு திரும்ப பெறுதல் பொருந்தும். ஆனால், வைப்புத் தொகை கணக்குகளுக்கு விதிகள் பொருந்தும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
5. மற்ற பலன்கள் : பரிந்துரைத்தல், கடன் வசதி உள்ளிட்டவை இந்த கணக்கில் உள்ளது. ஆனால் இதற்கு ஒருவர் மாதந்தோறும் சராசரி பேலன்சை பராமரிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Sbi mods interest rate and details
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்