/tamil-ie/media/media_files/uploads/2020/08/5-29.jpg)
investment plan in bank investment ideas investment tips
sbi fixed deposit state bank of india fixed deposit: எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றில் எந்த வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்தது என தெரிந்துக் கொள்ளுங்கள்.
வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும் வரி சேமிப்புக்கான முதலீடுகள் என்று பார்க்கும் போது நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் தான் வரிசையில் முதலில் வந்து நிற்கும். வங்கி சார்ந்த முதலீட்டுத் தயாரிப்பு என்பதாலும் அதில் உள்ள குறைந்த ஆபத்து மற்றும் நிறைவான பாதுகாப்பான தன்மை ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் நிரந்தர வைப்புத் தொகையையே அதிகம் நம்புகின்றனர்.
எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகள் வரி சேமிப்புக்கான வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வழங்கும் வைப்புத் தொகை திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது. சாதாரண மக்களுக்கு 6 முதல் 6.50 சதவிகிதம் வரையும் மூத்த குடிமக்களுக்கு 7 சதவிகிதம் வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
sbi fixed deposit state bank of india fixed deposit :எஸ்பிஐ
எஸ்பிஐ வங்கியின் வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு வைப்பு காலம் குறைந்தது 5 வருடங்கள். முதலீட்டாளர்கள் வருடத்துக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்து வருமான வரி சட்டம் பிரிவு 80C ன் படி அனுகூலங்களை பெற்றுக் கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி வரி சேமிப்பு வைப்புத் தொகைகளுக்கு தற்போது ஆண்டுக்கு சாதாரண நபர்களுக்கு 6 சதவிகிதமும் மூத்த குடிமக்களுக்கு 6.50 சதவிகிதமும் வட்டி வழங்குகிறது.
வேறு எந்த வங்கியும் இதுப்போல் யோசிக்கவில்லை.. Hdfc வங்கி சூப்பரான திட்டம் அறிமுகம்!
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி இரண்டு வகையான வரிசேமிப்பு நிரந்தர வைப்புத் தொகை திட்டங்களை வழங்குகிறது -பாரம்பரிய திட்டம் மற்றும் மறு முதலீட்டுத் திட்டம். இத்திட்டங்களில் சாதாரண நபர்களுக்கு 6.40 சதவிகித வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவிகித வட்டியும் வழங்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.