sbi home loan interest rate : நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தை 8.60 சதவிகிதத்தில் இருந்து 8.35 சதவிகிதமாக அதிரடியாகக் குறைத்துள்ளது. இந்த வட்டிவிகிதம் வீட்டுக்கடன் துறையில் மிகவும் குறைந்த ஒன்றாகும்.
இந்த வட்டி விகிதம் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்குப் பொருந்தும். இந்த வசதி கட்டுப்படியாகக்கூடிய வீடு கட்டும் அல்லது வீடு வாங்குபவர்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை அமைக்க உதவும் என்று எஸ்பிஐ எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த வட்டிவிகிதம் ஏற்கெனவே இருக்கும் வீட்டை புனரமைக்க கடன் வழங்கப்படாது.
இந்தக் கவர்ச்சிகரமான வட்டி திட்டம் மூலமாக, தகுதிவாய்ந்த வாடிக்கையாளர் 2.67 லட்சம் ரூபாய் வரையிலான வட்டி மானியத்தைப் பிரதம மந்திரி ஆவாஸ் திட்டத்தின் மூலமாகப் பெற முடியும். இந்தக் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதித் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த பாரத ஸ்டேட் வங்கி மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஆயிரத்தை லட்சமாக்க ஒரு வழி... எஸ்பிஐ -யின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேருங்கள்
அதாவது, நாங்கள் கட்டுப்படியாகக்கூடிய வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரும் திட்டத்தை மேற்கொள்ளும் கட்டுமானத் தொழிலதிபர்களுக்கு, வட்டியில் 35 அடிப்படைப் புள்ளிகள் வரை சலுகை அளித்து உற்சாகமளிக்க இருக்கிறோம். இதனால் இரு வகையில் பயன் உள்ளது. கட்டுமானத்துறையும் பயன் பெறுகின்றனர், அதாவது கட்டுமானத்துக்கு நிதி கிடைக்கிறது மற்றும் கட்டுப்படியாகக்கூடிய வீட்டுக்கான வீட்டுக்கடனும் அளிக்கப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதத்தில் சலுகையும் அளிக்கிறது. இனிமேல் 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடனுக்கு, வட்டி விகிதம் ரிஸ்க் அடிப்படையிலான விலை நிர்ணயத்தல் (Risk based price mechanism) முறையில் இருக்கும்.