SBI interest rate rules : மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அண்மையில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த புதிய திட்டங்கள் மற்றும் மாற்றங்கள் மே 1 இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர் சேவையில் தனக்கென தனி அடையாளத்தை படைத்திருக்கும் எஸ்பிஐ அண்மையில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி சில மாற்றங்களை அறிவித்தது. அதே போல் சில புதிய விதிமுறைகளை கொண்டு வருவதாக தெரிவித்திருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து அறிவித்ததை அடுத்து எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டது.
எம்சிஎல்ஆர் வட்டி விகித குறைப்பு மட்டுமில்லாமல் எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்தது. இதனால் 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் திட்டம் மீதான வட்டி விகிதம் 8.60 முதல் 8.90 சதவீதமாக இருக்கும். தற்போது இது 8.70 முதல் 9.00 சதவீதமாக உள்ளது.
இன்று மாத சம்பளம் அக்கவுண்டிற்கு வரும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு வருத்தமான தகவல்!
இந்த அனைத்து மாற்றங்களும் இன்று (மே 1 ) முதல் அமலுக்கு வருகிறது. இனி வரும் காலங்களில் எஸ்பிஐ கஸ்டமர்ஸ் இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
அமலுக்கு வரும் மாற்றங்கள்!
1. எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் இன்று முதல் 3.25 சதவீதமாகக் குறையும்.
2. ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும்.
3. ஆர்பிஐ எப்போதெல்லாம் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கிறதோ அதற்கேற்றவாறு எஸ்பிஐ வங்கி சேமிப்பு மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் தானாகவே மாற்றி அமைக்கப்படும்.