SBI Internet banking SBI new rules SBI WhatsApp pay implementation : வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பவது தொடர்பான தொழில்நுட்பங்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். பல்வேறு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் பீட்டா வெர்ஷனில் செயல்பட்டு வருகிறது வாட்ஸ்ஆப் பே. அக்டோபர் 30ம் தேதி பேஸ்புக் நிறுவர் மார்க் ஸூக்கர்பர்க் முதலீட்டார்களிடம் வாட்ஸ்ஆப் பே இந்தியாவில் வெகு விரைவாக துவங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்தியாவில் இந்த திட்டத்தை செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் இந்த வாட்ஸ்ஆப்பின் குறிப்பிட்ட பயனை நிச்சயம் அடைவார்கள். அனைவரும் இந்த 'வாட்ஸ்ஆப் பே’-வை பயன்படுத்துவார்கள் என்று அவர் அறிவித்தார்.
பண பரிமாற்றம் குறித்த தகவல்களை சேமிக்கும் சிஸ்டத்தினை இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கு 6 மாதம் நேரம் ஒதுக்கியும் ஆர்.பி.ஐ. ஏப்ரல் மாதம் 5ம் தேதி 2018ம் ஆண்டு அறிவித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் ஆர்.பி.ஐ “வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கு அதிகாரப்பூர்வமாக பேமெண்ட் தொடர்பான செயலிகளை பயன்படுத்த உரிமை வழங்கப்படவில்லை என்றும், கொடுக்கப்பட்ட கால கெடுக்குள் டேட்டா லோகலைசேசனை முறைப்படுத்தவில்லை” என்றும் வாதிட்டது. இதனை எழுத்துப்பூர்வமாகவும் ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது ஆர்.பி.ஐ.
தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ யூ.பி.ஐ பெமெண்டுகளுக்காக வாட்ஸ்ஆப் ப்ரூப் ஆஃப் கான்செப்ட்டை முடித்துள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் மூலமாக எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் பணத்தினை அனுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துள்ளது எஸ்.பி.ஐ. மத்திய அரசு மற்றும் ஆர்.பி.ஐயின் அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தவுடன் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்கள் பண பரிமாற்றத்தை வாட்ஸ்ஆப் மூலம் மேற்கொள்ளலாம்.
மேலும் படிக்க : மக்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் மூலம் அதிக லாபம் ஈட்டும் தனியார் வங்கிகள்!