இந்தியாவில் அதிகம் வாடிக்கையாளர்களைக் கொண்டது எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி. இதில் சொத்துக்களை அடைமானத்திற்கு எடுத்துக் கொண்டு கடன் வழங்குகிறார்கள் சொத்துக்களின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் கடன் தொகைக்கு ஏற்ப மாறுபடுகிறது. அது எவ்வளவு? என இங்கே காணலாம்.
வங்கிக் கடன் பலராலும் தவிர்க்க முடியாத ஒரு அம்சம்! அந்தக் கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருப்பதுதான் பாதுகாப்பானது. பலருக்கும் தெரிந்தது வங்கிகளில் அளிக்கப்படும் வீட்டு கடன், பெர்சனல் லோன், கார் லோன், கல்வி கடன் போன்றவை தான். ஆனால் எஸ்பிஐ வங்கியில் சொத்துக்களை அடைமானத்திற்கு எடுத்துக் கொண்டு கடன் அளிக்கப்படும் திட்டமும் நடைமுறையில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க: வீட்டுக்கடன் வாங்கி இருப்பவர்களிடம் வங்கிகள் கேட்க கூடாத கேள்விகள் இவை தான்!
பணத் தேவை இருக்கும் போது தங்களிடம் உள்ள சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற்று மாத தவணையில் அவற்றைச் செலுத்தலாம். கடன் மீதான வட்டியானது அவர்கள் பெரும் கடன் தொகையினைப் பொருத்து மாறும்.
எஸ்பிஐ வங்கி குறைந்தது 10 லட்சம் முதல் 7.5 லட்சம் கோடி ரூபாய் வரை சொத்துக்கள் எதிரான கடனை வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியில் குறைந்தது மாத வருமானம் 25,000 ரூபாய் வரை உள்ள தனிநபர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை சொத்துக்களை அடைமானம் வைத்து கடன் பெற முடியும்.
பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா? எச்டிஎப்சி வங்கியில் இருக்கும் அருமையான வசதி!
சொத்துக்களை அடைமானம் வைக்கும் போது அவை தன் பெயரில் அல்லது, மனைவி/கணவர், குழந்தைகள், பெற்றோர், இரத்த பந்தம் உடையவர்கள் பெயர்களில் இருந்தால் மட்டுமே எஸ்பிஐ வங்கி சொத்துக்களுக்கு எதிராகக் கடனை அளிக்கிறது.
வட்டி விகிதம்:
1. 1 கோடி வரையில் கடன் பெற்றால் 1.60 சதவீதம் நீங்கள் வட்டி செலுத்த வேண்டும்.
2. 2 கோடி வரையில் கடன் பெற்றால் 2.10 சதவீதம் வட்டி கட்ட வேண்டும்.
3. 5 கோடி வரையில் கடன் பெற்றால் 2.50 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் நியாயமான அளவில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவே வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் எந்தக் கடனாக இருந்தாலும், உரிய காலத்தில் முறையாக திருப்பிச் செலுத்தாவிட்டால் அது பெரும் சுமையாக மாறிவிடும் என்பதையும் மறந்து விடக்கூடாது.
read more: எஸ்பிஐ வழங்கும் 5 விதமான வட்டிக் கடன்கள்