எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இன்னும் மொபைல் எண்ணை இணைக்கவில்லையா? டென்ஷன் வேண்டாம் இதை படிங்க!

உங்கள் மொபைல் நம்பரை வங்கி கணக்குடன் இணைக்க முடியும். எப்படி தெரியுமா?

sbi personal banking
sbi personal banking

sbi mobile number change online : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நெட்பேங்கிங் முறையை பயன்படுத்துவதற்கு மொபைல்ஃபோன் எண்ணை பதிவு செய்வது மிக மிக அவசியம் .

அண்மைக் காலங்களில் நெட்பேங்கிங் முறை மூலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்கும்விதமாக எஸ்பிஐ சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன்படி, நெட்பேங்கிங் சேவையை பயன்படுத்த மொபைல் எண் அவசியம் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மொபைல் எண் இல்லாமல் நெட்பேங்கிங் சேவையை பயன்படுத்த முடியாது. மேலும், அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது மொபைல்ஃபோன் எண்களை நெட்பேங்கிங் வசதியுடன் இணைக்க வேண்டும்.

அவசர காலத்தில் அட்டகாசமான 3 வகை கடன் வசதிகள்.. வாரி வழங்கும் எஸ்பிஐ!

எஸ்பிஐ யின் இந்த அறிவிப்பு எல்லாம் ஓகே தான். ஆனால் தினமும் வேலைக்கு செல்பவர்கள் எப்படி வங்கிக்கு சென்று செல்போன் எண்ணை இணைக்க முடியும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷ, தலைவலி, அலைச்சல் தானே. அதனால் தான் உங்களுக்கு இப்படி ஒரு எளிமையான வழியை நாங்கள் காட்டுகிறோம். வங்கிக்கு நேரில் செல்லாமலே உங்களால் உங்கள் மொபைல் நம்பரை வங்கி கணக்குடன் இணைக்க முடியும். எப்படி தெரியுமா? இப்படி தான்!

படி 1 : முதலில் http://www.onlinesbi.com என்னும் இணையதளப் பக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
உங்களுடைய அடையாளப் பெயரையும் பாஸ்வேர்டையும் பதிவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கில் உள் நுழைய   வேண்டும்.

படி 2 : ‘My Account & Profile’ என்னும் பகுதியை கிளிக் செய்து, ‘Profile’ என்னும் பகுதியைத் தேர்வு  செய்ய வேண்டும்.

படி 3 : ‘Profile’ பகுதியில் உள்ள “personal details/Mobile” என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

படி 4 : உங்களுடைய கடவுச்சொல்லை (Profile Password) பதிவு செய்து உள்நுழைய வேண்டும். இப்பொழுது, உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்களுடைய வங்கிக் கணக்கோடு பதிவு செய்திருந்த மொபைல் எண் ஆகியவை திரையில் தோன்றும்.

படி 5 : இப்பொழுது, ‘Change Mobile number -Domestic only’ (Through OTP/ATM/Contact Centre) என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

படி 6 : ‘Personal Details -mobile number update’ என்னும் புதிய திரை தோன்றும். இப்பகுதியில் ‘create request’, ‘cancel request’ மற்றும் ‘status’ என்னும் மூன்று தேர்வு நிலைகள் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.

படி 7 : இங்கு நாம், ‘create request’ என்னும் பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்பகுதியில்தான் நாம் மாற்ற விரும்பும் புதிய மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, மீண்டும் அதே எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, “Submit” பகுதியை கிளிக்  செய்ய வேண்டும்.

படி 8 : எண்ணைப் பதிவு செய்தவுடன் திரையில் உடனடித் தகவல் (pop up Message) ஒன்று தோன்றும். அங்கு உங்களுடைய மொபைல் எண்ணை உறுதி செய்தவுடன் OK பகுதியை கிளிக்  செய்ய வேண்டும்.

படி 9 : இப்பொழுது நீங்கள், மாற்றப்பட்ட மொபைல் எண்ணை அங்கீகரிக்க வேண்டும். இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1) உங்களுடைய பழயை மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல்
2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA)
3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல். ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

படி 10 : மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் டெபிட் கார்டு வைத்திருக்கும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுத்து ‘OK’ கொடுக்கவும்.

படி 11 : உங்களுடைய டெபிட் கார்டுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு எண் திரையில் தோன்றும். “active/inactive” எனத் தோன்றும் பகுதியில் “Active” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

படி 12 : டெபிட் கார்டு எண், செயல்பாட்டுக்கு வந்த தேதி அல்லது காலாவதியாகும் தேதி, அட்டை உரிமையாளரின் பெயர், ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவு செய்த பிறகு சிறு அடைப்புப் பெட்டிக்குள் தோன்றும் கேரக்டர்களைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் சரிபார்த்த பின்பு ‘Submit’ பகுதியை கிளிக் செய்யவும்.

படி 13 : தகவல்களைச் சரிபார்த்த பின்பு “pay” பகுதியை கிளிக் செய்யவும். உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களைச் சரிபார்த்த பிறகு,
1) உங்களுடைய பழைய 6 மற்றும் புதிய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவுச்சொல் (OTP) மூலம் அங்கீகரித்தல்
2) ஏடிஎம் மூலம் இன்டர்நெட் பேங்கிங் வேண்டுதல் வழியாக அங்கீகரித்தல் (IRATA)
3) தொடர்பு மையத்தின் ( Contact Centre) மூலமாக அங்கீகரித்தல்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sbi mobile number change online clear guidelines

Next Story
பிக்சட் டெபாசிட் திட்டம் .. அடித்து சொல்லலாம் பெஸ்ட் வங்கி இதுதான்!icici fixed deposit interest
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express