ஆன் லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு பலரும் பழகிவிட்டோம். ஆனால் அதற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும்.
வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
ஐசிஐசிஐ நெட் பேங்கிங் யூஸ் பண்ண்றீங்களா? நீங்கள் வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை இதுதான்!
நெட் பேங்கிங் என்றாலே அதில் பணம் அனுப்ப இந்த மூன்று வசதிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆர்.டி.ஜி.எஸ், ஐ.எம்.பி.எஸ் மற்றும் நெஃப்ட் முறைகளில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்த பகிர்வில் எஸ்.பி.ஐ வங்கி நெட் பேங்கி சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் தொகை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கல்வி கடனில் அசத்தும் எஸ்.பி.ஐ... பெற்றோர்களே தெரிந்துக் கொள்ளுங்கள்!
1. ஐ.எம்.பி.எஸ் (IMPS)
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.
2. ஆர்.டி.ஜி.எஸ் (RTGS)
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 25 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 5 லட்சத்திற்கும் மேல் பணபரிமாற்றத்திற்கு 50 ரூபாய் + 5 ரூ ஜி.எஸ்.டி தொகை.
3. நெஃப்ட் (NEFT)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/3.png)
.எஸ்.பி.ஐ வங்கியில் எதற்கெல்லாம் கட்டணம் தெரியுமா?