SBI net banking : வங்கிக் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றால் நாம் ஒரு நாள் விடுமுறை எடுத்து வங்கிக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து..... இதனை கேட்கும் போதே சில சமயங்களில் ஆதாரை இணைக்க வேண்டுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். எல்லோருக்கும் எழும் அதே கேள்வி தான். ஆனால் தற்போது 12 இலக்க ஆதார் எண்ணை எஸ்.பி.ஐ வங்கியோடு இணைப்பது இனி மிகவும் எளிது. உங்களின் ஆதார் அட்டை எண்ணை எஸ்.பி.ஐ வங்கியோடு இணைக்கவில்லை என்றால் ஆன்லைன் மூலம் எப்படி இணைக்கலாம் என்பதை இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும் படிக்க : ரூ.100 சாப்பாட்டுக்கு ரூ.170 பில் கட்டுறோம்..! ஸ்விக்கியின் உண்மை முகம் இது தானா?
ஆதார் அடையாள அட்டை விபரங்களை இணைப்பது எப்படி?
முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
உங்களின் க்ரெடென்சியல்களை கொடுத்து உள் நுழையவும்.
அங்கு லிங்க் யுவர் ஆதார் நம்பர் என்ற 'Link your Aadhaar number' என்ற ஆப்சன் மை அக்கௌண்ட்ஸ் பகுதியில் இருக்கும்.
அங்கே உள்ளே சென்று நீங்கள் உங்களின் ஆதார் தகவல்களை தரலாம்.
உங்களின் 12 இலக்க ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக கொடுத்து சப்மிட் கொடுத்தால் அவ்வளவு தான்.
உங்களின் ஆதார் அடையாள அட்டை எண் உங்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உங்களின் மொபைலுக்கு வரும் கன்ஃபர்மேசன் மெசேஜ் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து கொண்டே வெறும் 10 நிமிடங்களில் இந்த பணியினை செய்து முடித்துவிடலாம். நீண்ட வரிசையில் நின்று வங்கி வேலைகளை பார்க்கும் காலம் மலையேறிவிட்டது வாடிக்கையாளர்களே!