/tamil-ie/media/media_files/uploads/2019/04/kamal-2.jpg)
state bank money transfer sbi
sbi net banking online : இந்த விழாக்காலத்தை எஸ்பிஐ உடன் கொண்டாடுங்கள். எஸ்பிஐ வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெறுவதுடன் கடனுக்கான செயல்பாட்டுக்க கட்டணத்திலும் முழுமையான தள்ளுபடி பெறலாம். மேலும், டிஜிட்டல் முறையில் கடன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு உயர்வடையாத வட்டியுடன் கடன் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் டூப்பர் அறிவிப்பு இதுதான்.
குறைந்தபட்சம் 8.70 சதவீதம் முதல் பல்வேறு வட்டி விகிதங்களில் கடன் கிடைக்கும். வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்பதற்கான உத்தரவாதமும் தரப்படுகிறது.யோனோ அப்ளிகேஷன் அல்லது இணையதளம் வாயிலாக ஆன்லைனில் கார் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில் கூடுதலாக 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
ரெபோ வட்டி விகிதத்துடன் சேர்ந்த வீட்டுக்கடன் திட்டங்கள் மூலம் மிகவும் மலிவான வட்டியில் வீட்டுக்கடன் வழங்குகிறது. 8.05 சதவீதம் வட்டியிலிருந்து இந்தத் திட்டங்கள் உள்ளன.ஸ்டேட் வங்கியில் சம்பளக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு யோனோ அப்ளிகேஷன் வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரை உடனடி கடன் கிடைக்கும்.
கல்விக் கடன் திட்டங்களை குறைந்தபட்சமாக 8.25 சதவீதம் வட்டியில் பெறலாம். இந்தியாவில் படிக்க அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையும் வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் 1.50 கோடி ரூபாய் வரையும் கடன் தரப்படும்.
எஸ்பிஐ- யில் இப்படியொரு விஷயம் இருப்பது இத்தனை நாள் தெரியாம போச்சே!
தனிநபர் கடனைப் பொறுத்தவரை 20 லட்சம் ரூபாய் வரை 10.75 சதவீதம் வட்டியுடன் பெற முடியும். மாதத் தவணனை சுமையைக் குறைக்கும் வகையில், அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரையான தனிநபர் கடன் திட்டங்கள் உள்ளன.இந்த வட்டி விகிதம் புதிதாதக் கடன் பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, பழைய வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பொருந்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.