எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்? வங்கிக்கு போகாமலே நெட் பேங்கிங் பதிவு செய்யலாம்

How to Apply for SBI Net Banking Online : வீட்டில் இருந்தபடியே ஆன்லை சேவை துவங்குவதற்கு நீங்கள் உங்கள் கையில் சில பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

By: Updated: February 15, 2019, 01:26:20 PM

SBI Net Banking Online Registration: வங்கி சேவை பயன்படுத்தும் அன்றாடம் ஏதேனும் ஒரு சேவைக்காக வங்கிக்கு நேரில் செல்வது அவசியமாகிறது. அந்த அவசியத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் ஆன்லை நெட் பேங்கிங்.

இந்த சேவையை எல்லா வங்கிகளுமே வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே அதிக வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ தனது ஆன்லைன் சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது.

இந்த ஆன்லைன் சேவையை பெற பலரும் வங்கிக்கு நேரில் சென்று பல விவரங்களை பெற்று வருவார்கள். ஆனால் வங்கிக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் சேவைக்கு பதிவு செய்யலாம்.

SBI Net Banking Registration: எஸ்.பி.ஐ ஆன்லைன் சேவை

வீட்டில் இருந்தபடியே ஆன்லை சேவை துவங்குவதற்கு நீங்கள் உங்கள் கையில் சில பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

 • ஏ.டி.எம் கார்டு
 • வங்கி கணக்கு எண்
 • சிஐஎஃப்
 • உங்கள் வங்கி கிளை எண்
 • வங்கி கணக்கோடு இணைத்திருக்கும் செல்போன் எண்
எப்படி பதிவு செய்வது :  
 1. முதலில் எஸ்.பி.ஐ வங்கியின் இணையத்தளம் பக்கமான www.onlinesbi.com அனுகவும். பின்னர் அந்த பக்கத்தில் இருக்கும் புதிய பதிவு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
 2. பின்னர் ஒரு சிறிய பாப் அப் தோன்றும். அதில் சில விவரங்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
 3. அந்த பாப் அப் மெனுவில், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை பதிவு செய்யுங்கள். அதன் பிறகு, சிஐஎஃப் எண், வங்கி கிளை எண், நீங்கள் இருக்கும் நாடு ஆகிய விவரங்களை பதிவிட வேண்டும்.
 4. இறுதியாக உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதை பதிவிடுங்கள்.
 5. உங்களிடம் ஏடிஎம் கார்டு இருந்தால் உடனடியாக ஆன்லைன் சேவை பதிவாகிவிடும்.
 6. முதலில் இந்த பக்கம் ஒரு தற்காலிக பயணாளி கணக்கு பெயரை கொடுக்கும். பின்னர் நீங்கள் தான் உறுதியான யூசர் நேம் மற்றும் பாஸ்வர்டு கொடுக்க வேண்டும்.
 7. இறுதியாக அந்த கணக்கு பதிவின் யூசநேம் மற்றும் பாஸ்வர்டு பதிவானதும், இணையத்தளம் உங்கள் வங்கி கணக்கின் பக்கத்திற்கு இட்டுச் செல்லும்.
 8. இதன் மூலம் உங்கள் வங்கியின் கணக்கும், இணையத்தளப் பக்கமும் இணைக்கப்படும். பின்னர் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், இணையத்தளம் மூலம் செய்துக் கொள்ளலாம்.

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பாரம் குறைந்தது… புதிய சலுகையால் குளிர்ந்த மனம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi net banking registration

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X