எஸ்.பி.ஐ ஆன்லைன் சேவைகள்: ஃபிக்ஸட் டெபாசிட் முதல் டீமேட் கணக்கு வரை

உங்கள் கைபேசி எண்ணை மூன்று வழிகளில் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே மாற்றலாம்.

By: February 22, 2020, 4:31:25 PM

ஆன்லைன் வசதியும் இணையதள வங்கி சேவை வசதியும் வளர வளர எந்தவிதமான வங்கி பரிவர்த்தனையையும் இப்போது நீங்கள் ஆன்லைன் வழியாக செய்துக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வேலையை முடிக்க, வங்கியின் கிளைக்கு நேரடியாக சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து நிறைய படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

வருங்கால வைப்பு நிதியை உங்கள் சம்பளத்தில் இருந்து கம்பெனி பிடிக்கிறதா?

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) யின் இணையதளம் பல்வேறு வசதிகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. வேருமனே ஒரு வங்கி கணக்கு துவங்குவது மட்டுமல்ல, நிரந்தர வைப்பு தொகை கணக்கு துவங்குவது, டேர்ம் டெபாசிட் (Term deposit) ஏன் ஒரு டீமேட் கணக்கை கூட இணையதளம் வாயிலாக துவக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே உங்கள் கைபேசி எண்ணை மாற்றி கொள்ளலாம்.

நிரந்தர வைப்பு தொகை கணக்கு துவங்குவது (Fixed Deposit)

இணையதள வங்கி சேவைக்கான ஐடி (ID), மற்றும் குறைந்தது ஒரு வங்கி பரிவர்தனை கணக்கு அந்த இணையதள வங்கி பயனர் பெயரோடு இணைக்கப்பட்டு இருந்தால் நீங்கள் நிரந்தர வைப்பு தொகை கணக்கை இணையதளம் வாயிலாக துவக்கலாம்.

வருமான வரி செலுத்துவது

நேரடி வரி (direct taxes OLTAS), மறைமுக வரி (Indirect taxes Customs), மறைமுக வரி (CBEC) போன்றவற்றை நீங்கள் எஸ்பிஐ இணையதளம் வாயிலாக கட்டலாம். இதற்கு இணையதள வங்கி சேவை செயல்படுத்தப்பட்ட ஒரு வங்கி கணக்கு மட்டுமே தேவை.

கல்வி கடன் (Education loan)

வீட்டில் இருந்தபடியே எஸ்பிஐ கல்வி கடன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கடன் தொடர்பான அனைத்து விபரங்களும் கட்டணங்களும் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

டீமேட் கணக்கு (Demat account)

நீங்கள் ஒரு டீமேட் கணக்கு அத்துடன் ஆன்லைன் வர்த்தக கணக்கை, ஆன்லைன் மூலமாகவே SBI Cap Securities Ltd மூலமாக துவங்கலாம். எஸ்பிஐ வங்கி இணையதளம் வாயிலாக கணக்கு துவக்குவதற்கான கோரிக்கையை SBI Cap Securities Ltd அனுப்ப வேண்டும். ‘sbismart.com.’ என்ற இணையதள முகவரிக்கு சென்று SBI Cap Securities Ltd ஐ கணக்கு துவங்க நேரடியாக கோரிக்கை விடுக்கலாம்.

கைபேசி எண்ணை மாற்றுவது

உங்கள் கைபேசி எண்ணை மூன்று வழிகளில் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லாமலே மாற்றலாம்.

டெல்லி இந்திராகாந்தி ஏர்போர்ட்டுக்குப் போறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கங்க

ஒன்று இணையதள வங்கி சேவை மூலமாக கைபேசி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) மூலமாக, அடுத்தது எஸ்பிஐ ஏடிஎம் (IRATA: Internet Banking Request Approval through ATM) வாயிலாக அல்லது தொலைபேசி வழி வங்கி சேவை மூலமாக.

இதனை ஆங்கிலத்தில் படிக்க – From opening Fixed Deposit to starting Demat account

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Sbi online fixed deposit to starting demat account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X