sbi online sbi account sbi online banking : இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது சேமிப்பை, பிக்சட் டெபாசிட்களாகவே வங்கிகளில் சேமித்து வைக்க விரும்புகின்றனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அவர்கள் மாத சிறுசேமிப்பு கணக்கில் சேர அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
Advertisment
இந்தியர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நாட்டில் செயல்பட்டுவரும் பொதுத்துறை மட்டுமல்லாது தனியார் துறை வங்கிகளும் பிக்சட் டெபாசிட் சேவைகளை வழங்கி வருகின்றன. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் காலஅளவிலான பிக்சட் டெபாசிட் சேவைகளை, வங்கிகள் அளித்து வருகின்றன.
பிக்சட் டெபாசிட்டை ( Fixed Deposit) முன்னதாக முடிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் தனித்தனியே விதிமுறைகளை வகுத்துள்ளன.
sbi online sbi account sbi online banking : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ( SBI)
முன்னதாக முடிக்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு 0.05 சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மதிப்பு எனில், அதாவது ரூ.3 லட்சத்தை பிக்சட் டெபாசிட் செய்து முன்னதாக முடிக்கும் பட்சத்தில் ரூ.1,500 அபராத கட்டணமாக வசூலிக்கப்படும்.
2 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு அதிகபட்சமாக, மூத்த குடிமக்களுக்கே 3.5% தான் வட்டி கொடுக்கிறார்கள். பொது மக்களுக்கு 3% தான் வட்டி கொடுக்கிறார்கள். 2 கோடி ரூபாய்க்குள் என்றால் அதிகபட்சமாக பொது மக்களுக்கு 5.4%, மூத்த குடிமக்களுக்கு 6.2% வட்டி கொடுக்கிறார்கள்.
பிக்சட் டெபாசிட்டின் மதிப்பு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்பு எனில், 1 சதவீத அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.18 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். பிக்சட் டெபாசிட்டில் பணம் இருந்த காலகட்டத்திற்கு ஏற்ப வங்கி வட்டியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.7 நாட்கள் கால அளவிலான பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வட்டி வழங்குவதில்லை.