Advertisment

ஒன்றுக்கு நூறு முறை நோட் பண்ணிக்கோங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை செய்யவே கூடாது!

வெற்று ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ITR Filing Last Date

ITR Filing Last Date

sbi personal loan interest : நீங்கள் வங்கிகளில் பர்சனல் லோன் வாங்கும் போது கீழ்காணும் தவறுகளைச் செய்யக் கூடாது.

Advertisment

காரணம், பர்னல் லோன் என்பது மிக மிக ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை நீங்கள் தலையை விட்டால் அதை முழுமையாக கட்டி முடிக்கும் வரை உங்களால் நிம்மியதாக இருக்க முடியாது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்கள் பர்சனல் லோன் என்றாலே அலறி அடித்து ஓடுவதற்கும் இதுதான் காரண.

1. திருப்பிச் செலுத்தும் தகுதிக்கு அதிகமாக லோன் வாங்கக் கூடாது. முறையாக இஎம்ஐ மூலம் உங்களால் திருப்பிச் செலுத்த முடிந்தால் மட்டுமே பர்சனல் லோன் வாங்க வேண்டும்.

2. சரியான அளவில் தனது வங்கிக் கணக்கில் சீராக சேமிப்பை வைத்திருந்தால் வங்கிகள் அவருக்கு பர்சனல் லோனை வழங்குகின்றன. எனவே உண்மையான வங்கி நடவடிக்கைகளை லோன் வழங்கும் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதோடு லோன் வழங்கும் வங்கிக்கு, வங்கி நடவடிக்கைகள் எதையும் மறைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் லோன் கிடைக்காது.

3. நிலுவையில் இருக்கும் லோன் விவரங்களைத் தெரிவித்தல் ஏற்கனவே வாங்கிய லோனுக்கு இஎம்ஐ செலுத்தி வந்தால் அவற்றை லோன் வழங்கும் வங்கிக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதை வைத்தே உங்களுக்கு லோன் தொகை நிர்ணயிக்கப்படும். ஆனால் அதை மறைத்து, அதிக லோன் வாங்கினால் அதைத் திருப்பிச் செலுத்த நீங்கள் திணற வேண்டியிருக்கும்.

எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைனில் பணம் அனுப்புங்க.. இனி எந்த கட்டணமும் கிடையாது.

4. வங்கி ஆவணங்களை நிரப்ப நீங்கள் கற்றுக் கொள்ளலாம். வெற்று ஆவணத்தில் கையெழுத்திட வேண்டாம்.

5. உங்களால் செலுத்த முடியும் அளவிற்கு இஎம்ஐ-யை தேர்ந்தெடுங்கள். அதிக இஎம்ஐயுடன் கூடிய குறைந்த காலம், குறைந்த இஎம்ஐயுடன் கூடிய அதிக காலத்தைவிட சிறப்பாக இருக்கும். ஆனால் அது உங்கள் மாத பட்ஜெட்டைப் பாதிக்கக் கூடாது.

6. வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் போன்ற விவரங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சில சமயம், வங்கிகள் புதிய கட்டணங்களையும் விதிக்க வாய்ப்பிருக்கிறது.

7. பர்சனல் லோன் மூலம் உங்களுக்குத் தேவையான தொகைய ஒரு குறிப்பிட்ட வங்கி வழங்கவில்லை என்றால், மீதி தேவையாக இருக்கும் பணத்திற்காக வேறொரு புதிய வங்கியை நாடாதீர்கள்.

8. வங்கி வழங்கும் லோனுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை மிகத் தெளிவாக வாசிக்க வேண்டும். அதன் மூலம் வட்டி விகிதம், ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஏனைய மறைமுகக் கட்டணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment