Advertisment

பொது இடங்களில் மொபைல் சார்ஜ் பண்ணுபவரா நீங்க? வீடியோ போட்டு எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI released video regarding charging phone at public stations - பொது இடங்களில் மொபைல் சார்ஜ் பண்ணுபவரா நீங்க? வீடியோ போட்டு எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி

SBI released video regarding charging phone at public stations - பொது இடங்களில் மொபைல் சார்ஜ் பண்ணுபவரா நீங்க? வீடியோ போட்டு எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி

பேருந்து நிலையம்ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டிருக்கும். அதனருகே, இடம் பிடித்து நந்தி போன்று அமர்ந்து கொண்டு பலர் சார்ஜிங் செய்வதை பார்த்திருப்போம். மற்றவர்களும் சார்ஜ் செய்வார்களே என்ற எந்த அடிப்படை சிந்தனையும் இல்லாமல், அங்கேயே கட்டிய புளிசோத்தை தின்றுக் கொண்டு கல்லு மாதிரி உட்கார்ந்து இருப்பார்கள்.

Advertisment

நாம் கையுடன் கொண்டு செல்லும் சார்ஜர்களை, பாயின்டில் கனெக்ட் செய்து, சார்ஜ் செய்யலாம். சில சார்ஜிங் ஸ்டேஷன்களில் USB கேபிளுடன் சார்ஜர் அமைந்திக்கும்.

மேலும் படிக்க - எஸ்பிஐ-யின் இந்த சேமிப்புத் திட்டங்கள் தெரிஞ்சா போதும்... வேற எதுவும் தேவையில்லை

இது போன்ற இடங்களில் சார்ஜ் செய்யும் போது கவனம் தேவை என்று 

Think twice before you plug in your phone at charging stations. Malware could find a way in and infect your phone, giving hackers a way to steal your passwords and export your data.#SBI #Malware #CyberAttack #CustomerAwareness #Cybercrime #SafeBanking #JuiceJacking pic.twitter.com/xzSMNNNv4U

— State Bank of India (@TheOfficialSBI) December 7, 2019 target="_blank" rel="noopener">எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

7, 2019

அதாவது, USB கேபிள் உடன் இணைந்த சார்ஜரை பயன்படுத்தும் போது, நம்முடைய செல்போனில் இருக்கும் வங்கிக்கணக்கு, பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடுபோக வாய்ப்பு இருப்பதாக எஸ்பிஐ எச்சரிக்கை செய்கிறது.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

வங்கிக்கணக்கு தகவல்கள் திருடப்பட்டால், கணக்கில் இருக்கும் பணம் சுருட்டப்படும் வாய்ப்பு கண்டிப்பாக இருப்பதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய, சொந்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறது வீடியோ.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment