sbi rules :நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இதுவரை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட், சேவிங்ஸ் அக்கவுண்ட், பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
வங்கிகள் உங்களிடம் இருந்து பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை அபராதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிலருக்கு நிர்வாகம் தொகையை எடுத்தப் பின்பு தான் தெரியும். இன்னும் சிலருக்கு எடுத்த பின்பு கூட தெரியாது. திடீரென்று பணம் கம்மியாக உள்ளது அல்லது பேலன்ஸ் குறைவாக இருப்பதை கவனித்த பின்பு வங்கியில் நேராக சென்று விசாரிப்பார்கள்.
அப்போது தான் முழு விபரமும் அவர்களுக்கு தெரிய வரும். ஆனால் இனி இந்த தொல்லை இல்லை. எந்தெந்த காரணத்திற்காக எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் உங்களிடன் அபராதத் தொகையை வசூலிக்கிறது என்ற விவரங்களை நீங்களே எளிதாக தெரிந்துக் கொள்ளுங்கள்.
எச்டிஎப்சி கஸ்டமர்ஸ் முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க!
1. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.
2. சேவிங்ஸ் அக்கவுண்ட் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்
அடிக்கடி யூஸ் பண்றீங்களா? இதோ ஒரு சின்ன மாற்றம்!
3.‘எஸ்பிஐ பேங்க் பட்டி’ (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
4. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.
5. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.
6. 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.
7. எஸ்பிஐ புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.